Thursday, December 11, 2014

புவி வெப்பம் வரவரக் கூடிக் கொண்டே போவதால் கடலின் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் சென்னை, கொழும்பு போன்ற கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.



நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும் பூமிமட்டம் உள்ளிறங்குவதாக நிலவியல் அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
 
சுற்றுச்சூழல் பாதிப்புக்களால் வேகமாக வெப்பமடைந்து வருகிறது.
பெரும் நகரங்களில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நிலம் படிப்படியாக உள்ளிறங்கி வருகிறது என்றும் அறிஞர்கள் எச்சரித்துள்ளார்கள்.
 
கடல் மட்டம் உயர்வதைவிட, நிலம் உள்ளிறங்குவது பெரும் பிரச்சினையாக மாறிவருவதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலவியல் அறிவியல் ஒன்றிய அவை அறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்தப் பாதிப்புகளுக்கெல்லாம் மனிதனே நேரடி காரணம் என்று இந்த நிலவியலாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

டோக்கியோ நகரத்தில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டதால் நிலமட்டம் சில இடங்களில் இரண்டு மீட்டர் ஆழத்துக்கு உள்ளிறங்கி விட்டது.
நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதற்குக் கடும் தடை விதிக்கப்பட்ட பிறகே நிலம் உள்ளிறங்குவது நின்றுள்ளது.

பாதிப்புகளைத் தடுக்க வேண்டுமானால், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை இந்த நகரங்கள் உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும், வேறு நீராதாரங்களைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும் என்றும் அறிஞர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.

0 comments:

Post a Comment