Wednesday, December 10, 2014

பொதுவாக குழந்தையின் படிப்பு விடயத்தில் பெற்றோர்களின் பயம் அதிகமாகவே இருக்கும்.

தங்களது பிள்ளை தனித்துவம் வாய்ந்தவானாக இருக்க வேண்டும், படிப்பில் சுட்டியாக திகழ வேண்டும் என்பது அனைத்து பெற்றோரின் ஆசை.
ஆனால் இந்த ஆசையை நிறைவேற்ற பிள்ளைகளை படி படி என திட்டுவது மட்டும் போதாது.

அவர்களை அன்புடன் அரவணைத்து உடன் அமர்ந்து, அவர்களின் சுமையையும் பகிர்ந்து கொள்ளுதல் அவசியமாகும்.
\
பாடங்களை பட்டியலிடுதல்
ஒரே நாளில் அனைத்து பாடங்களையும் படிப்பது சாத்தியமற்றது.
எனவே ஒவ்வொரு தினமும் எந்தெந்த பாடங்களை அவர்கள் படிக்க வேண்டும் என்பதை பெற்றோர்களே பட்டியல் இட்டு அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.

நோ சீரியல்
பிள்ளைகளை படிக்க சொல்லிவிட்டு நீங்கள் தொலைக்காட்சியில் சீரியல் பார்ப்பதோ அல்லது திரைப்படம் பார்ப்பதோ சரியல்ல.
ஏனெனில் அது அவர்களை படிப்பில் கவனம் செலுத்த விடாமல் கோபத்திலே ஆழ்த்தி கவனத்தை சிதற வழிவகுக்கும்.
எனவே குழந்தைகளின் அருகே இருந்து அவர்கள் படிப்பதை கவனிக்கவும்.

தர்ம அடி வேண்டாம் ப்ளீஸ்
குழந்தைகளுக்கு தேர்வு நெருங்கும் வேளையில் அவர்கள் சரியாக படிக்காமல் இருந்தாலோ அல்லது பாடத்தில் சந்தேகம் கேட்டாலோ அவர்கள் அடித்து உதைத்து டென்ஷன் ஆக்காமல் பொறுமையாக கையாளுங்கள்.
பிறகு அவர்கள் வாங்கும் மதிபெண்களும் உங்களது மதியை மயக்கும்.

ஆசிரியர்களை சந்திக்கவும்
முக்கியமாக அவ்வப்போது உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களை சந்தித்து, அவர்கள் எப்படி படிக்கிறார்கள் என்று பெற்றோர்கள் கேட்டு கொள்ள வேண்டும்.
இதன் மூலம் உங்கள் குழந்தைகளின் பிரச்சனை அறிந்து கொள்ளும் நீங்கள், அதனை சரிசெய்ய முயல வேண்டும்.

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணட்டும்
வார இறுதி நாட்களில் படிப்பு விடயத்தில் அவர்களை நச்சரிக்காமல் சிறிது நேரம் அவர்களை தொலைக்காட்சி பார்க்கவிடவோ அல்லது அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடவோ அனுமதி அளியுங்கள்.

நண்பனை போல் இருங்கள்
ஒரு வயதுக்கு மேல் உங்களது பிள்ளைகளை படிப்பது விடயத்தில் தோழமையுடன் அணுகுங்கள்.
இல்லையேல் அவர்களுக்கு படிப்பு மேல் வெறுப்பு வந்துவிடும்.

0 comments:

Post a Comment