Saturday, July 5, 2014

மதுரை-மும்பை இடையே மீண்டும் ஏர் இந்தியா விமானம் சேவையைத் துவங்குவதாக அறிவித்துள்ளது.
மதுரை-மும்பை இடையே இந்த விமானம் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. ஜூலை 5ஆம் தேதி முதல் இந்த விமானம் (ஏ1 672) மதுரையிலிருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு, மாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடையும்.
அங்கிருந்து மாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு, மாலை 5.35 மணிக்கு மும்பை விமான நிலையம் சென்றடையும் என, மதுரை ஏர் இந்தியா நிறுவன நிலைய மேலாளர் ஏ. அணில்குமார் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment