Wednesday, January 15, 2014


குரூப்-1 தேர்வாளருக்குஇலவச பயிற்சி வகுப்பு

பெரம்பலூர்: குரூப்-1 தேர்வு எழுதுவோருக்கு வரும், 18ம் தேதி முதல், பெரம்பலூரில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஜன., 18ம் தேதி முதல் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது என பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட, 79 பணியிடங்களுக்காக நடக்கும் குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், குரூப்-1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், ஜன., 18ம் தேதி முதல், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்காக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்ற, 150க்கும் மேற்பட்ட நபர்கள் வெற்றி பெற்று, பல்வேறு துறைகளில் அரசு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்பு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற அரசு பணியாளர்களை, பயிற்றுனர்களாக கொண்டு நடத்தப்படுகிறது.எனவே அரசு பணியில் சேர்ந்திட இந்த வாய்ப்பை தகுதியான நபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 98421-96910 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment