ஃபேஸ்புக் மூலம் நட்பை பகிர்ந்துகொள்வது போல, இனி நல்ல செயல்களுக்கு நன்கொடையும் அளிக்கலாம். இதற்கான வசதியை ஃஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.
முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக்கின் லைக் மற்றும் ஷேர் பட்டன்கள் மிகவும் பிரபலமானவை. ஃபேஸ்புக் வாயிலாக பிடித்தமான தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் விருப்பம் தெர்விக்கவும் இந்த பட்டன்கள் உதவுகின்றன.
இப்போது ஃபேஸ்புக் பயனாளிகள் தங்கள் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தக்கூடிய வகையில் நன்கொடை அளிப்பதற்கான பட்டனை அறிமுகம் செய்துள்ளது.
ஃபேஸ்புக்குடன் கைகோர்த்துள்ள தொண்டு நிறுவனங்களின் டைம்லைன் மற்றும் அவற்றின் ஃபேஸ்புக் பக்கத்தின் மேலே இந்த நன்கொடை பட்டன் தோன்றும். அதை கிளிக் செய்தால் நேரிடையாக நன்கொடையாக செலுத்தலாம். இணைய பண பரிமாற்ற சேவையான பே பால் மூலம் பணத்தை செலுத்தலாம்.
ஃபேஸ்புக் மூலம் நேரடியாக தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக இந்த டொனேட் (நன்கொடை) பட்டனை அறிமுகம் செய்துள்ளதாக ஃபேஸ்புக் வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.
பயனாளிகள் நன்கொடை அளிப்பதுடன் தங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை பரிந்துரைத்து அவர்களையும் நன்கொடை அளிக்க ஊக்குவிக்கலாம்.
தொண்டு நிறுவனங்கள் மக்களை எளிதாக சென்றடைந்து நன்கொடை திரட்ட இந்த வசதி உதவும் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை ஹையான் சூறாவளி உலுக்கியபோது ஃபேஸ்புக் முதல் முறையாக செஞ்சிலுவை சங்கத்திற்கு நன்கொடை அளிக்கும் வசதியை அறிமுகம் செய்த்து. இந்த வசதியை தற்போது தொண்டு நிறுவனங்களுக்கு விரிவாக்கம் செய்துள்ளது.
ஃபேஸ்புக் இரங்கல் தெரிவிக்கும் பட்டனை அறிமுகம் செய்ய இருப்பதாக இணைய உலகில் பேசப்பட்டு வரும் நிலையில், நன்கொடை அளிக்கும் வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.
ஃபேஸ்புக் நன்கொடை வசதி பற்றிய வலைப்பதிவு http://newsroom.fb.com/News/773/Donate-to-Nonprofits-Through-Facebook
0 comments:
Post a Comment