Friday, January 10, 2014

muslim-arrestedபுதுடெல்லி,
2014ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் சிறுபான்மை சமூதாயத்தினரை இழுக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி  சுஷில்குமார் ஷிண்டே, சிறுபான்மை சமூதாயத்தை சேர்ந்த வாலிபர்களை கைது செய்யும் போது மிகவும் கவணமாக இருங்கள் என்று மாநில முதல் -மந்திரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறுபான்மையினர் என்பவர்கள் குறிப்பிட்ட சமூதாயத்தை சேர்ந்தவர்கள் இல்லை. குற்றங்களில் அவர்களுக்கு தொடர்பு இல்லை என்றால் உடனடியாக விடுவித்து விடுங்கள் என்று நாங்கள் அனைத்து மாநில முதல் மந்திரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்று ஷிண்டே கூறியுள்ளார்.
அனைத்து மாநிலங்களில் உள்ள ஒரு ஆலோசனை குழுவை நியமிக்க ஆராய்ந்து வருவதாக ஷிண்டே கூறியுள்ளார். இந்த குழு பயங்கரவாத தடுப்பு சட்ட வழிகாட்டுதல் படி அமைக்கப்படும் என்று ஷிண்டே கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment