Saturday, March 22, 2014

திருமறையில் குர்ஆனில் கண்களை பற்றி இறைவசனங்கள்:
   أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ
(பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? (90:8)
  ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِ ۖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۚ قَلِيلًا مَّا تَشْكُرُونَ
பின்னர், (படைப்பாகிய) அதனைச் செப்பனிட்டுத்தன்னுடைய “ரூஹை” அதில்புகுத்தி (உங்களைஉற்பத்திசெய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகுசிலரே! (32:9)
إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا
(பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம் தாம் மனிதனை படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும் பார்வையுடையவனாகவும் அவனை ஆக்கினோம். (76:2)
ரெடினா (Retina) என்ற பகுதி கண்ணில் உள்ளே உள்ள ஒரு திரை போன்ற அடுக்கு ஆகும்.இதில் பார்வைகளுக்கு தேவையான நரம்பு செல்கள் உள்ளன. ஒரு மனிதனுடைய பார்வை திறனுக்கு ரெடினா என்ற உயிர் உள்ள போட்டோ பிலீம் இன்றியமையாத திசுஆகும். அல்லாஹ்தஆலா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அருளிய காலங்களில் அறிவியலில் எந்த கண்டுபிடிப்புகள் கிடையாது. இவ்வாறு சூழ்நிலை இருந்த அக்காலத்தில் அல்லாஹ் தன் அருள் மறையில் திருகுர்ஆனில் சூராபாதிர் அத்தியாத்தில் வசனம் 8-ல் பார்வைகளை பற்றி இவ்வாறு கூறுகிறான். அதாவது;
  أَفَمَن زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا ۖ فَإِنَّ اللَّهَ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۖ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ
حَسَرَاتٍ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَصْنَعُونَ

எவனுக்குத் தீயகாரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ அவனும், (எவன் தீயகாரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக்கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ்தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் விரும்பியவர்களை நேரானவழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(35:8)
இந்த வசனத்தில் ரெடினா (Retina) என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. “RAA” என்ற அரபி வார்த்தைக்கு “பார்ப்பது” என்று அர்த்தம்உள்ளது. இது மட்டுமின்றி இதே சூராவில் வசனம் 19வில் குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள் என்றும் , வசனம் 20வில் இருளும் பிரகாசமும் சமமாகாது என்றும் அல்லாஹ் கூறுகிறான். இவை குர்ஆன் முலம் மனித குலத்திற்கு அல்லாஹ் கூறும் அத்தாட்சிகளாகும்.
  وَمَا يَسْتَوِي الْأَعْمَىٰ وَالْبَصِيرُ
குருடனும்பார்வையுடையவனும்சமமாகமாட்டார்கள். (35:19)
  وَلَا الظُّلُمَاتُ وَلَا النُّورُ
(அவ்வாறே) இருளும்பிரகாசமும் (சமமாகாது).(35:20)
குர்ஆன் கூறும் கண்புரை (Cataract) நோய்விற்கு மருந்து;
சுவிஸ் மருந்துக்கம்பெனி குர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைவசனங்களில் அடிப்படையில் கண்புரை நோய்விற்கு அறுவை சிக்கிசை இல்லாமல் ஒரு அற்புதமான மருந்தை உருவாக்குகிறார்கள். இது சம்மந்தமான செய்தி கத்தார்நாட்டின் அர்-ராயா என்ற செய்தித்தாளில் வந்த செய்தியாவது, எகிப்திய மருத்துவரான டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது அவர்கள் மனிதனின் வேர்வை(Secretions of human Sweat Gland)யில் இருந்து 99சதவிதம் பயனுள்ள, எந்த பக்கவிளைவும் இல்லாத ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்தார், பின்னர் அதை ஐரோப்பா மற்றும் அமெக்கா போன்ற நாட்டில் பதிவு செய்தார். அந்த குறிப்பிட்ட பொருளில் இருந்து சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் கண்களுக்கு தேவையான மருந்து தயாரிப்பில் ஈடுப்படுகிறார்கள்.
சூரா யூசுப் என்ற திருக்குர்ஆனின் அத்தியாயமே டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது அவர்கள் கண்புரை நோய்க்கு மருந்து உருவாக்க துண்டியது. அவர் கூறுகிறார், ஒரு நாள் காலை நேரத்தில் சூரா யூசுப் படித்துக் கொண்டு இருந்தேன், அச்சூராவின் 84 மற்றும் அடுத்து வரும் வசனங்கள் என் சிந்தனையை துண்டியது
  اذْهَبُوا بِقَمِيصِي هَٰذَا فَأَلْقُوهُ عَلَىٰ وَجْهِ أَبِي يَأْتِ بَصِيرًا وَأْتُونِي بِأَهْلِكُمْ أَجْمَعِينَ
“நீங்கள் என்னுடைய இந்தச்சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். (12:93).
நபி யாகூப் (அலை) அவர்களுக்கு கவலையினாலும், வருத்தினாலும் கண்புரை நோய் வந்தது, பின்னர் நபி யூசுப் (அலை) அவர்களின் சட்டையினால் யாகூப் (அலை) அவர்களுக்கு பார்வை மீண்டும் கிடைத்தது. டாக்டர் இதற்கு என்ன காரணம் இருக்கும் என்ற ஆய்வில் இருந்த சமயத்தில் அவரின் சிந்தனைக்கு வந்த பொருள் தான் மனிதனின் வேர்வை. அவர் அதை சில சோதனை விலங்குகளில் ஆய்வு செய்தார். அது நேர் மறையான தாக்கங்கள் தந்ததின் அடிப்படையில் 250 கண்புரை நோயாளிகளுக்கு அம்மருந்தை தினத்தோறும் இருமுறை என இரண்டு வாரம் தந்தார்.அதில் அவருக்கு 99சதவிதம் வெற்றியை தந்தது. அதன் பின் அவர் ஐரோப்பா மற்றும் அமெரிக்க போன்ற நாட்டில் உள்ள சில ஆய்வு நிருவனங்களுடன்(Medical laboratory) மேலும் சில ஆய்வுகளை செய்து பின்னர் சுவிஸ் நாட்டை மையமாக கொண்ட மருந்து கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்தார். மேலும் அந்த மருந்தில் “Medicine of Quran” என்ற வாசகத்தை பதியவேண்டும் என்ற நிபந்தனையுடன் அதன் உரிமையை தந்துவிட்டார். அல்லாஹ் திருக்குர்ஆனில் மனித இனத்திற்கு அருமருந்தாக தந்துள்ளான். இதை தான் அல்லாஹ் கீழ்காணும் வசனத்தில் கூறுகிறான்;
  وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا
நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் அருமருந்தாகவும் உள்ளவைகளையே இந்தத் திருக்குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதனையும்) அதிகரிப்பதில்லை. (17:82).
கண் மருத்துவதுறையில் இஸ்லாமியர்களின் பங்கு:
மருத்துவமும் அறுவை சிகிச்சைகளிலும் அதிகமான கண்டுப்பிடிப்புகள் இந்த 20 மற்றும் 21வது நூற்றாண்டில் தான் பல வந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இஸ்லாமிய Golden Ages என்று சொல்லக்கூடிய காலக்கட்டதில் அதாவது கிபி800 – 1400 காலக் கட்டத்திலேயே முஸ்லிம் மருத்துவர்களான ஹுனைன் பின் இஸ்ஷாக் , அலி பின் அல்-கஹ்ஹால் , அம்மார் பின் அலி அல்-மவ்சிலி, பின் அபி உசைபி’ஹ் போன்றவர்கள் கண் அறுவை சிசிச்சை பற்றி பல புத்தகங்கள் எழுதியது மட்டும் இல்லாமல் பல அறுவை சிசிச்சைகளும் செய்து கட்டினார்கள்.
கண் – அதன் பாகங்களும், செயல்களும்:

அக்குவஸ் திரவம் (Aqueous Humour): இது கண்களின் முன் பகுதியில் தெளிவான நீர்களான பகுதி, கண் கார்னியா மற்றும் கண் லென்ஸ் இவைகளுக்கு தேவையான சத்துகளை தருவதுமில்லாமல், கண்ணின் அழுத்தத்தை சமநிலை செய்கிறது.
விட்ரிஸ் திரவம் (Vitreous Humor)கண்ணின் பின்பகுதியில் தெளிவான நீர் போன்று ஜெல்லியான திரவம்இது. இவை கண்ணின் வடிவத்தை நிலை நிறுத்துகிறது, மேலும் ரெடினா(Retina)வை தங்கிப் பிடித்து கொள்கிறது.
சிளியரிதசைகள் (Ciliary Muscles)இது கண்ணில் உள்ள சுயமாக இயங்கும் தசைகள், இவைகள் குவிதூரங்களுக்கு ஏற்ப லென்ஸ்(Lens)யின் வடிவத்தை மாற்றுகிறது.
கார்னியா (Cornea): கண்ணின் முன் பகுதியிலுள்ள கண்ணாடியான திசு ஆகும். இதற்கு இரத்த, நரம்பு தொடர்புகள் கிடையாது. கண் தானத்தில் இந்த கார்னியாவை தான் எடுத்து அடுத்தவர்களுக்கு வைக்கிறார்கள்.
கோன் நரம்பு செல்கள் (Cone Nerve cells)இது கூம்பு வடிவில் உள்ள நரம்பு செல்களாகும். இவை ஒரு பொருட்களின் கலர்களை நல்ல வெளிச்சதில் படம்பிடித்து மூளைக்கு தகவல்களை அனுப்பும். நூக்கமான விசயங்களையும் படம்பிடிக்கும்.
ராடுநரம்புசெல்கள் (Rods Nerve cells):  இது உருண்டை வடிவில் உள்ள நரம்பு செல்களாகும். இவை ஒரு பொருட்களின் வடிவங்களை படம் பிடித்து மூளைக்கு தகவல்களை அனுப்பும்.
ஃபோவியா (fovea): கண்ணின் ரெடினா (Retina) பகுதியில் நடுவில் கூம்பு வடிவ நரம்புகள் மட்டும் உள்ள பகுதி. இது கூர்மையும் பார்வைகளை தரக்கூடிய பகுதி.
ஐரிஸ் (Iris): இது கண்ணின் நடுவில் வெளி பகுதியில் உள்ள தசைகளான வட்டவடிவமுள்ள உறுப்பு ஆகும். இதை தான் கண் விழி என்கிறார்கள். இதன் நிறமே கண் விழியின் நிறம்.
லென்ஸ் (Lens): இது கண்ணாடியான திசு, இதன் வழியே தான் ஒளி கண்களுக்கு செல்கிறது. இதன் வடிவம் தேவையான குவிதூரத்தின் அடிப்படையில் சுற்றியுள்ள தசைகளால் மாறும்.
பார்வை நரம்பு (Optic Nerve)கண்ணின் பின் பகுதியில் தொடந்து மூளைவரை செல்லும் நரம்புதான் இது.
பியூப்பில் (Pupil): கண் விழியில் மையத்தில் உள்ள சிறிய துவாரத்திற்கு பெயர் தான் பியூப்பில். இதன் வழியே தான் ஒளி கண் உள் பகுதிக்கு செல்கிறது.
ஸ்கிளீரா (Sclera): இது கண்ணை சுற்றி சூழ்ந்துள்ள கடினமான வெள்ளையான சவ்வு. இதன் மீது தான் கண்ணின் புற தசைகள் கண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ரெடினா (Retina): கண்ணின் பின் புறத்தின் உள்பகுதியில் கூம்பு வடிவ, உருண்டை வடிவ நரம்பு செல்களான பகுதியாகும்.
கொராயிடு (Choroid): இது வெளி Scleraவிற்கும், உள் Retinaவிற்கும் நடுவில் உள்ள இரத்தநானங்கள் உள்ள அடுக்காகும். இது ஒளியை உறுஞ்சக் கூடியது.
ஒளியும் நம் பார்வையும்:

அதிகமான விலங்குகளும், மிகுதியான தாவரங்களும் ஒளியை உணரக்கூடியவைகள், ஒளியின் தன்மையின் மாற்றங்களையும் அறியக்கூடியவைகள். ஒளிகள் (LIGHT) இவைகள் மின்காந்தஅலை (ELECTROMAGNETIC RADIATION) களாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவக்கூடியது. இவைகள் GAMMA RAYS, X-RAYS, UV-RAYS, VISIBLE RAYS, IR-RAYS, ராடார், ரேடியோஅலை, டிவி அலை என பல ஒளிகதிர்கள் உள்ளன. இவைகளுக்கு வேறுப்பட்ட அலைதூரம் (Wave Length)கள் உள்ளன. இவைகள் அனைத்தையும் மனிதன் தன் கண்ணால் காணமுடியாது. அல்லாஹ்தஆலா மனிதனின் கண்ணுக்கு ஒரு வரையுரை வைத்துள்ளான். அல்லாஹ் உலகத்தில் ஏற்படுத்திய நியதிகளைப் பார்த்தால், அல்லாஹ் ஏன் மனிதனை படைத்தான் என்பதுவிளங்கும், இதை தான் அல்லாஹ் குர்ஆன் முலம் நமக்கு கூறுகிறான். மின் காந்த அலைகளில் அலைதூரம் (WAVE LENGTH) 400 nm மற்றும் 700nm இடைப்பட்ட ஒளி அலைகளையே மனிதன் தன் கண்ணால் காணமுடியும்.
கண் – ஒர் ஒளி உணரும் எந்திரம்:
மனித கண் ஒரு நடமாடும் கேமராவாக அல்லாஹ் உருவாக்கி உள்ளான், மனிதன் காணும் பொருட்களின் ஒளியானது, கண்ணின் கார்னியா, பியூபில், லென்ஸ் மற்றும் விட்ரிஸ் திரவம் வழியே கண்ணில் உள்ளே உள்ள ரெட்டினாவில் விழுகிறது. ரெடினா ஒரு போட்டோ பிலிமாக செயல்படுகிறது. ரெட்டினாவில் உள்ள கூம்பு வடிவ, உருண்டை வடிவ நரம்பு செல்கள் தன் மீது விழப்பட்ட ஒளியில் இருந்து தகவல்களை எடுத்து மூளைக்கு அனுப்புகிறது. அக்குவஸ் மற்றும் விட்ரிஸ் திரவங்கள் கண்ணின் வடிவத்தை மாறாமல் நிலை நிறுத்துகிறது. கேமரா லென்ஸ் போலவே கண்ணில் உள்ள லென்சும் உருவத்தை தலைகீழ் தான் காட்டும், ஆனால் மூளை அதை சரியாக விளங்கி விடும். நாம் பார்க்கும் பொருட்களின் பிம்பம் ரெடினாவில் சரியாக விழ கண்ணின் புறதசை(MUSCLE)களின் செயல் மிக இன்றியமையானவை.
கார்னியாவும் லென்சும் தங்களுக்குள் மாறுதல் செய்து பிம்ப ஒளி சரியாக ரெடினாவில் விழ வழி செய்கிறது. லென்சு தன்னை மாற்றிக் கொள்ள சிளியரி தசைகள் உதவி செய்கிறது.
கண்ணின் ஒளிவிலகல் பிழைகள் (Refractive errors in the eye) :
கார்னியாவும் லென்சும் சரியான முறையில் ஒளி பிம்பங்களை ரெடினாவின் மீது விழச் செயயவில்லை என்றால் கண்ணால் சரியாக பார்ப்பது முடியாது. இப்படிப்பட்ட பார்வை கோளாறுகளை கிட்டப்பா(Near-Sightness), தூரப்பா (Far-Sightness) மற்றும் Astigmatism என்றும் சொல்வார்கள்.
கிட்டப்பா (Myopia அல்லது Near-Sightedness) அக்குவஸ் மற்றும் விட்ரிஸ் திரவங்களில் மாற்றங்களினலோ அல்லது வேறு பிரச்சினைகளினலோ கண்ணின் வடிவ அமைப்பு நிளமாக்கி விட்டால், அல்லது கார்னியா அதிகம் வளைந்து விட்டால் கண்ணிற்கு வரும் ஒளிபிம்பம் ரெடினாவில் சரியாக விழாமல் முன்பே விழுந்து விடும். இதனால் ஒளியின் பிம்பம் மூளையால் சரியாக விளங்க முடியாது.
தூரப்பா (Hyperopia அல்லது Far-sightedness) இது Myopia (கிட்டப்பா) விற்கு எதிர்மறையானது, அதாவது இதில் ஒளிபிம்பம் ரெடினாவிற்கு பின்னால் விழுந்து விடும். இதனாலும் சரியாக பார்வை கிடைக்காது.
Astigmatism : இது சரியான வடிவம் இல்லாத கார்னியாவால் இப்பிரச்சினை வருகிறது.
இது போல் உள்ள பிரச்சினைகளை லென்சுகளை சரி செய்வதின் முலம் சரி செய்யப்படுகிறது.
ரெடினா(Retina), அதன்செயல்பாடு:
மனிதனின் தோள்களில் உள்ள நரம்பு செல்களை போல் ரெடினாவில் உள்ள நரம்பு செல்கள் கிடையாது. இவைகள் மூளையின் நேரடி நரம்பு செல்களாகும். இது எக்டோடாம் மற்றும் நியுரல்டியுப் இவைகளில் இருந்தே உருவானதால், இதுமூளையின்ஒருபாகங்களைபோன்றதாகும்.
ரெடினாவில் இரு வகையான நரம்பு செல்கள் உள்ளன
1)   கூம்பு வடிவ நரம்பு செல்கள் (Cone Nerve Cells) –இது ஒரு பொருட்களின் கலர்களை நல்ல வெளிச்சதில் படம் பிடித்து மூளைக்கு தகவல்களை அனுப்பும் கூம்புவடிவில் உள்ள நரம்பு செல்லாகும். இது நூக்கமான (Fine) பொருட்களையும், புத்தகங்களிலுள்ள சிறு எழுத்துகளை படம் பிடித்து மூளைக்கு தகவல்களை தரக்கூடியது.
2)   உருண்டை வடிவ நரம்பு செல்கள் (Rod Nerve Cells) –இது உருண்டை வடிவில் உள்ள நரம்பு செல்களாகும். இவை ஒரு பொருட்களின் வடிவங்களை படம் பிடித்து மூளைக்கு தகவல்களை அனுப்புகிறது. இது dim light களிலும் பொருளின் வடிவத்தை படம் பிடிக்கும்.
இவைகளில் ட்ரான்ஸ்-மெம்பரேன்புரதம் (Trans-membrane Protein) அப்சீன் (Opsin) மற்றும்கூரோமோபோர் (Chromophore) என்ற 11-Cis-Retinal, இவைகள்வரும் ஒளியை எடுத்துக்கொண்டு பார்வைநரம்பு (Optic Nerve) வழியே மூளைக்கு மின் அழுத்த அலைகளாக மூளைக்கு தகவல்களை அனுப்பும்.
பார்வைக்கோளாறுகள் :
ஒளிப்பட கூடிய கார்னியா முதல் மூளை வரை உள்ள ஏதாவது ஒரு இடங்களில் பிரச்சினை இருந்தாலும் கண்ணின் பார்வையில் கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளது. கூம்பு வடிவ நரம்பு செல்கள் பாதிக்கப்பட்டால் பார்வை முழுவதும் தெரியாது. அதே சமயம் உருண்டை வடிவ செல்கள் பாதிக்கப்பட்டால், மாலைக் கண்நோய் (Night Blindness) வரும். Blindness (பார்வைக்கோளாறு) இவைகளை 20/200 Vision or Worse என்ற அடிப்படையில் அளவிடப்படுகிறது. அதாவது 20 அடி தூரம் உள்ள பொருட்களை ஒருவர் குறைந்தது பார்க்க வேண்டும், ஒரு சராசரி மனிதன் 200அடி வரை தூரமுள்ள பொருட்களை காணலாம். சில பிரச்சினைகள் Cones மற்றும் Rods நரம்புசெல்களில் பாதிப்பால் வரும், அல்லது பார்வை மண்டல (Visual System)த்தில் உள்ள பாதிப்பாலும் வரலாம். அதாவது மூலையில் ஏற்ப்பட்ட பாதிப்பாலும் பார்வை பிரச்சினை வரும். பார்வை சம்மந்தமான பிரச்சினைகளை கண்மருத்துவர் (Ophtamologist)களிடம் சென்று நம் குறைகளை கூறி தக்க வைத்தியம் செய்ய வேண்டும்.

Thanks:dryousufadam.com

0 comments:

Post a Comment