Saturday, March 22, 2014

புதுடெல்லி: முஸ்லிம்களை சக்திப்படுத்துவது நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது என்று அறிவித்த முக்கிய அரசியல் கட்சிகள் டெல்லியில் போட்டியிட ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தவில்லை. ஆனால், மாயாவதியின் பி.எஸ்.பி இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வட கிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி ஆகிய இடங்களில் பி.எஸ்.பி வேட்பாளர்களாக முஸ்லிம்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அப்துல் ஸமி சல்மானி வட கிழக்கு தொகுதியிலும், ஷக்கீல் ஸெஃபி கிழக்கு டெல்லி தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மி கட்சி முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளது. முஸ்லிம்களுக்கு சீட் வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்ததாக அண்மையில் கட்சியில் இணைந்த பிரபல தலைவர் கலீமுல் ஹாஃபிஸ் கூறுகிறார். அதேவேளையில் தகுதியின் அடிப்படையிலேயே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கூறுகிறது.

0 comments:

Post a Comment