
சமீபத்திய அனுபவத்தின் மூலம் முதல் முறையாக தமது அணுகுமுறையைத் தளர்த்திக்கொண்டுள்ளது ஆம் ஆத்மி அரசு.
டெல்லி தலைமைச் செயலக வளாகத்தில் சனிக்கிழமை மக்கள் தர்பார் நடத்தப்பட்டது. புகார்களைப் பெறுவதற்காக கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் வந்தனர்.
ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த மூங்கில் தடுப்புகளை உடைத்த மக்கள் முண்டியடித்துக் கொண்டு கேஜ்ரிவாலை நெருங்க முயன்றனர். இதனால் அவரை போலீசார் பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் வந்த அவர், பொதுமக்களின் குறைகளைக் கேட்டார். ஒரு கட்டத்தில் முண்டியடித்த கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.
சுமார் 50 ஆயிரம் பேர் குவிந்ததால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால், குறைகளைக் கேட்க வந்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பாதியிலேயே வெளியேறினார்.
இந்த நிலையில், மக்கள் தர்பாரைத் தொடர்ந்து நடத்தும் முடிவை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஜனதா தர்பார் இனி நடத்தப்பட மாட்டாது. அதற்கு பதிலாக, மக்களின் புகார் மனுக்கள் இணையத்தளங்கள் வழியாக பெற்றுக் கொள்ளப்படும். இதற்கென தனியாக ஒரு இணையதளம் விரைவில் தொடங்கப்படும்.
அதேவேளையில், வாரத்தில் ஒரு நாள் முதல்வர் அலுவலகத்தில் என்னை பொதுமக்கள் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், மக்கள் தங்களது புகார்களைப் பெற கால் சென்டர்கள் அமைக்கப்படும். தபால் மூலமாகவும் புகார்களை அனுப்பலாம்" என்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.
0 comments:
Post a Comment