Saturday, March 22, 2014

பெரம்பலூர் மாவட்டத்தில் பதற்றமான 165 ஓட்டுச் சாவடிகளில் துணை ராணுவ பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தல் நடைபெறும் ஓட்டுச்சாவடி மையங்களில் பதற்றமான ஓட்டுச் சாவடிகளை கண்காணித்தி டவும் அங்கு நடக்கும் ஓட்டுப்பதிவு உள்ளிட்ட அனைத்து நடைமுறை களையும் பதிவு செய்திடவும் தேர்தல் ஆணையம் உத்தர விட்டு உள்ளது.அதன்படி அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் தற்போது முழுவீச்சில் செய்து வரு கின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலுர் சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 229 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 30 ஆயிரத்து 612 பெண் வாக்காளர்களும் இதரர் 10 நபர்கள் என மொத்தம் 2 லட்சத்து 56ஆயிரத்து 851 வாக்காளர்கள் உள்ளனர்.
குன்னம்
குன்னம் சட்டசபை தொகுதியில் 1 லடசத்து 18 ஆயிரத்து 982 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 305 பெண் வாக்காளர்களும் இதரர் 15 பேரும் என மொத்தம் 2, லட்சத்து 38 ஆயிரத்து 302 வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி மாவட்டத்தில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 211 ஆண் வாக்காளர்களும் 2 லட்சத்து 49 ஆயிரத்து 917 பெண் வாக்காளர்களும் இதரர் 25 பேரும் என மொத்தம் 4 லட்சத்து 95 ஆயிரத்து 153 வாக்காளர்களும் உள்ளனர்.
590 வாக்குச்சாவடிகள்
இவர்கள் ஓட்டுப்போட பெரம்பலூர் சட்டசபை தொகுதியில் 297 ஓட்டுச்சாவடிகளும் குன்னம் சட்டசபை தொகுதியில் 293 ஓட்டுச்சாவடிகளும் என மொத்தம் 590 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இதில் காவல் துறை, வருவாய்த்துறை புள்ளி விபரங்கள் அடிப்படையிலும் ஏற்கனவே தேர்தல் நடந்த வரலாறுகளை கணக்கில் கொண்டும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
165 பதற்றமானவை
இதன்படி பெரம்பலூர் சட்டசபை தொகுதியில் 86 வாக்குச்சாவடிகளும் குன்னம் சட்டசபை தொகுதியில் 79 வாக்குச்சாவடிகளும் என 165 ஓட்டுச்சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப் பட்டுள்ளன. இந்த பதற்றமான ஓட்டுச் சாவடிகளில் நடக்கும் ஓட்டுப்பதிவு விபரங்களை பதிவு செய்திட தேர்தல்பிரிவு லேப்டாப் களை சேகரித்து வருகிறது. இதற்காக அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்பட்டுள்ள 18 லேப்டாப்கள் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி களுக்கு வழங்கப்பட்டுள்ள 95 லேப்டாப்கள் ஆகியன தேசியத் தகவல் மையத்தின் மூலம் தேர்தல் பணிகளுக்காக பெறப்பட்டுள்ளன. மொத்தத்தில் 150க்கும் மேற்பட்ட லேப்டாப்களைப் பெற திட்டமிடப்பட்டுள் ளது.
கண்காணிப்பு கேமராக்கள்
இவற்றோடு பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கண் காணிப்பு கேமராக்களை பொருத்தி ஓட்டுச்சாவடியின் நிலைமை காலையில் ஓட்டுப் பதிவு தொடங்கியது முதல் ஓட்டுப்பதிவு முடியும்வரை கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட உள்ளது.
இதனையொட்டி பெரம் பலூர் மாவட்ட தேசிய தகவல் மைய அதிகாரிகள் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலகம் ஆகியவற்றின் மூலம் பெறப் பட்ட 100க்கும் மேற்பட்ட லேப்டாப்கள் சரியாக இயங்கு கிறதா பேட்டரி கெப்பாசிட்டி எப்படி உள்ளது நாள் முழுக்க பதிவு செய்ய வாய்ப்புள்ளதா என ஆராயப்பட்டு வருகிறது. இதில் தகுதியானவற்றை பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பொறுத் துவதற்காக கண்காணிப்புக் கேமராக்கள் அல்லது வெப்கேமராக்களை தேவைக் கேற்ப சேகரிக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களில் துணை ராணுவம் அல்லது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேற்கண்ட தகவலை பெரம்பலூர் மாவட்ட தேர்தல்அலுவலர் கலெக்டர் தரேஸ் அஹமது தெரி வித்துள்ளார்.

0 comments:

Post a Comment