பெரம்பலூரில் சாலை சீரமைப்பு பணிகள் ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.
மோசமான சாலை
பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் தனியார் மேல் நிலைப்பள்ளி முதல் டாஸ்மாக் கிட்டங்கி சுற்றுச்சாலை சந்திப்பு வரை சாலை மேடு பள்ளமாக இருந்தது.
டாஸ்மாக் கிட்டங்கி அருகில் சாலைகள் கரடு முரடாக கிடந்தது. இதனால் டாஸ்மாக் கிட்டங்கிக்கு தினந் தோறும் வந்துசெல்லும் நூற்றுக்கணக்கான வாகனங் கள் பாதிக்கப்பட்டன. இது குறித்து மாவட்ட நிர்வாகத் திற்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் பொதுமக்களிடம் இருந்துகோரிக்கை விடுக்கப் பட்டது.
இதனைத்தொடர்ந்து ஒருங் கிணைந்த சாலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் வடக்குமாதவி சாலையில் 3 கி.மீ. தூரத்திற்கு ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் இப்பணி நிறை வடையும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித் தனர்.
புதிய தார் சாலை
பெரம்பலூர் நகரில் துறை மங்கலம்– ஆத்தூர் சாலை, துறையூர் சாலை ஆகியவற்றில் புதியதார்சாலை அமைக்கும் பணி நடை பெற்று வருகின்றது. இந்த இருசாலைகள் மற்றும் வடக்குமாதவி சாலையில் புதிய தார்சாலை அமைக்கும் பணியும், ஆலத்தூர்– கொளக்காநத்தம் சாலையை அகலப்படுத்துதல், சாலையின் இருபுறமும் தடுப்பு சுவர் கட்டுதல் உள்பட பெரம்பலூர் நெடுஞ்சாலை உதவி கோட்டத்தில் ஏறத்தாழ 10 கோடியே 40 லட்சம் மதிப்பில் சாலைகள் மேம்பாடு செய்திட பொதுத்தேர்தல் அறிவிப்பிற்கு முன்னரே அனுமதிபெறப் பட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்

0 comments:
Post a Comment