ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவரும் 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு(2014) ஹஜ் புனிதப் பயணம்மேற்கொள்ள விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களிடம் இருந்து, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு விண்ணப்பங்களை வரவேற்று இருந்தது.எண். 13, மகாத்மா காந்திசாலையில் (நுங்கம்பாக்கம்நெடுஞ்சாலை), ரோஸி டவர், 3ம்தளத்திலுள்ள தமிழ்நாடு மாநிலஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து பிப்ரவரி 1-ஆம்தேதியில் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்
அல்லது www.hajcommitee.com என்ற இணையதளம்மூலமாகவும் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பப்படிவத்தை நகல்கள் எடுத்தும் பயன்படுத்தலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு மார்ச் 15-ஆம்தேதி கடைசி நாள் என்றும்அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டிப்புசெய்து மாநில ஹஜ் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி, வரும் 22-ஆம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.கால நீட்டிப்பு செய்ததற்கான அறிவிப்பு ஹஜ் குழுவின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment