பல வகையான பதப்ப்படுத்தும் முறைகளை தாண்டி, பாட்டில்களில் அடைக்கப்ப்பட்டு விற்கப்படும் தண்ணீரில் எந்த வித கனிமங்களும் கிடையாது என ஆராய்ச்சி ஒன்றில் தெரிய வந்துள்ளது. அவற்றை சுத்திகரிக்கும் போது, அந்த தண்ணீரின் கனிம சத்துக்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு விடுகின்றன.
வெயில் அதிகம் உள்ள இடங்களில் இந்த தண்ணீரை அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் மக்களின் உடலுக்கு, நாளடைவில் தேவையான மக்னீசியம், பொட்டாசியம், சிலிகா, சல்பேட் ஆகிய கனிமங்களை சேர விடாமல் செய்கின்றன. இந்த கனிமங்கள் இல்லாத காரணத்தால் திசு சீரமைப்பு மற்றும் சக்தி தருவது போன்ற செயல்பாடுகள் தடைபடுகிறது.
இயற்கை தந்த வரமே தண்ணீர். அதை இயற்கையாக அருந்துவதே சாலச் சிறந்தது. பெரும்பாலும் நாம் எங்கு சென்றாலும் கையில் ஏதேனும் ஒரு பை எடுத்துதான் செல்வோம். அதில் ஒரு சிறிய பாட்டிலில் நம் வீட்டு தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளலாமே…ஆரோக்கியம் காக்கப்பட இந்த சிறிய சுமையை சுமக்கலாமே…..கடைபிடியுங்கள்..!
0 comments:
Post a Comment