சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் கருணாநிதி தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை பெருவாரியான வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெறச்செய்ய பாடுபடுவது என மனித நேய மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.
சிதம்பரம் நடராஜா கார்டனில் மனித நேய மக்கள் கட்சி நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில மண்டல அமைப்புச் செயலாளர் ஜெயின்னுலாபுதீன் தலைமை வகித்துப் பேசினார். கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் முஹம்மது அய்யூப் முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் இஸ்மாயில் வரவேற்றார். பி. முஹம்மது அலி நன்றி கூறினார்.
கூட்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் திருமாவளவனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய பாடுபடுவது என்றும், மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 comments:
Post a Comment