Monday, March 24, 2014

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 வால்வோ சொகுசுப் பேருந்துகளில் நேரிட்ட விபத்துக்களுக்கு பேருந்தின் அதிவேகமே காரணம் என்பது தெரிய வந்திருப்பதை அடுத்து, சொகுசுப் பேருந்துகளின் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அதில் முதல்கட்டமாக வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை அனைத்து சொகுசுப் பேருந்துகளிலும் கட்டாயமாக்குவது, விமானத்தைப் போலவே கருப்புப் பெட்டி, சீல் பெல்டுகள் போன்றவற்றை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
பேருந்தின் வேகம், பயணிக்கும் தூரம், ஓட்டுநர் பணியாற்றும் நேரம் என அனைத்தும் இந்த கருப்புப் பெட்டியில் பதிவாகும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து ஏப்ரல் முதல் வாரத்தில் பெங்களூருவில் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதுமுள்ள சொகுசுப் பேருந்து தயாரிப்பாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தற்போது பயன்பாட்டில் இருக்கும் சொகுசுப் பேருந்துகளில் இதுபோன்ற பாதுகாப்புக் கருவிகளை பொருத்த உத்தரவிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment