பெங்களூர்: குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி குறித்து விமர்சிக்க ஊடகங்கள் தயாரா? என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது: நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், குஜராத் மாநிலம், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து விட்டதாக, பொய் தகவல் பரப்பப்படுகிறது. குஜராத்தின் உண்மையான வளர்ச்சி நிலையை படம் பிடித்து காட்ட, எந்த ஊடகத்துக்காவது, தைரியம் உள்ளதா?குஜராத்தில் உள்ள விவசாயிகள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலங்கள், தொழிற்சாலை அமைப்பதற்காக பறிமுதல் செய்யப்படுகின்றன. அங்குள்ள விவசாயிகளே, இதைப் பற்றி, என்னிடம் தெரிவித்தனர். டெல்லி சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன், எங்கள் கட்சி வேட்பாளர்களை பற்றி, சில ஊடகங்கள், "ஸ்டிங் ஆபரேஷன்" எனப்படும், ரகசிய விசாரணை நடத்தி, அது பற்றிய தகவல்களை வெளியிட்டன. இதைப் போல், குஜராத்தில் நடத்தாதது ஏன்? இவ்வாறு, கெஜ்ரிவால்
பேசினார்.
பேசினார்.
பெங்களூரு ஹெப்பாளில் சனிக்கிழமை ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை ஆதரித்து அவர் பேசியதாவது:
பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஊழலில் திளைத்துள்ளன. ஊழல் செய்வதில் இரண்டு கட்சிகளும் நாணயத்தின் இரு பக்கங்கள். அவர்களிடமிருந்து நாட்டை காக்க வேண்டிய அவசரநிலை உருவாகியுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.
மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதற்குப் பதிலாக, ஊழல் செய்யும் கட்சிகளை மக்கள் மன்னிக்கக் கூடாது. எனவே, பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடமிருந்து நாட்டைக் காக்க ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார் அவர்.
0 comments:
Post a Comment