Sunday, March 16, 2014

க்களவைத் தேர்தலின்போது சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் ஆகியோர்
தனக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள் என்று கிரிக்கெட் வீரர் முகமது கைப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் புல்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கைப் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கைஃப், "எனது சொந்த மாநிலத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன் இது எனக்கு உற்சாகத்தை தந்துள்ளது.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் ஆகியோரிடம் வாழ்த்துப் பெற்றுள்ளேன். மூன்று பேரும் எனக்காக ஆதரவு திரட்ட இங்கு வருவதாக உறுதி அளித்துள்ளனர். எனக்காக ஆதரவு திரட்டுவதற்காக இதர கிரிக்கெட் வீரர்களையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment