சிறுபான்மையினர் 10 சதவீதத்துக்கு மேல் ஒரு பகுதியில் இருந்தாலே அங்கு வன்முறை ஏற்பட்டு விடுகிறது என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் மீண்டும் இதுபோன்று மதக்கலவரங்கள் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் நபர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.
மத வன்முறைகள் தொடர்பாக இண்டியா டி.வி.யில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கோரப்பூர் எம்.பி.யான யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக மேலும் கூறியுள்ளது:
ஒரு பகுதியில் 10 முதல் 20 சதவீதம் வரை சிறுபான்மையினர் இருந்தால் அங்கு சிறிய அளவில் மத வன்முறை ஏற்படுகிறது. இதுவே அவர்கள் 20 முதல் 35 சதவீதம் இருந்தால் வன்முறை பெரிய அளவு அதிகரிக்கிறது. அவர்கள் 35 சதவீதத்துக்கு மேல் ஒரிடத்தில் இருந்தால் அங்கு முஸ்லிம் இல்லாதவர்கள் இருக்கவே முடிவதில்லை. சிறுபான்மையினர் குறித்து நடப்பு நிகழ்வைத்தான் நான் கூறியுள்ளேன்.
தங்கள் மீது எந்த வகையில் தாக்குதல் நடத்தப்படுகிறதோ அதே வகையில் ஹிந்துக்கள் பதிலடி தர வேண்டும். சிறுபான்மையினர் எங்களில் ஒருவரை கொலை செய்தால், அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க முடியாது. எதிர்த்தரப்பினர் அமைதியாக இருக்காவிட்டால், அமைதியாக இருப்பது எப்படி என்பதை நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுப்போம்.
அவர்கள் மனிதர்களாக இல்லா மல் தீயசக்திகளாக இருக்கும்போது நாம் பதிலடி கொடுத்துதான் ஆக வேண்டும். எனது ஒரு கையில் ஜெபமாலை உள்ள அதே நேரத்தில் மற்றொரு கையில் ஈட்டி உள்ளது.
இந்து பெண்களை குறிவைத்து காதலித்து திருமணம் செய்வதாக கூறி மதமாற்றம் செய்வது என்பது இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சதி. “லவ் ஜிகாத்” என்பது பொய்யாக உருவாக்கப்பட்ட வாச கம் அல்ல. நீதிமன்ற உத்தரவு கள் சில இதற்கு ஆதாரமாக உள்ளன. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இது போன்ற இந்திய இறையானமையை பாதிக்கும் வகையில் பொதுமக்களிடம் பெசி வரும் அயோக்கியர்களுக்கு, அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் எம்பி பதவி, இசட் பிரிவு பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதுவே அவர்கள் சுதந்திரமாக இது போன்ற கருத்துக்களை பரப்ப வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
மீண்டும் மீண்டும் இதுபோன்று மதக்கலவரங்கள் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் நபர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

0 comments:
Post a Comment