Friday, August 8, 2014

                                   
புதுடெல்லி: நாட்டில் நகர்ப்புறங்களில் வசிக்கும் 1.88 கோடி குடும்பங்களுக்கு குடியிருக்க வீடுகள் இல்லை என்றும், தமிழ்நாட்டில் 12 லட்சம் குடும்பத்தினர் வீடு இல்லாமல் தவிப்பதாகவும் மத்திய வீட்டு வசதி, வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
வீடுகள் இல்லாதோர் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. அந்த மாநிலத்தில் 30 லட்சம் குடும்பங்களுக்கு வீடு இல்லை.
அடுத்த இடங்களில் மகாராஷ்டிரத்தில் 19 லட்சம், மேற்கு வங்கத்திலும், ஆந்திரத்திலும் (பிரிக்கப்படாத போது) தலா 13 லட்சம், தமிழ்நாட்டிலும், பீகாரிலும் தலா 12 லட்சம், ராஜஸ்தானில் 10 லட்சம், குஜராத்தில் 9 லட்சம், ஜார்க்கண்டில் 6 லட்சம் குடும்பங்கள் வீடின்றி உள்ளனர். நாட்டில் நகர்ப்புறங்களில் வசிக்கும் 71 சதவீத வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு உள்ளது.
ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மறுவாழ்வு திட்டம், ராஜீவ் ஆவாஜ் யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நகர்ப்புறங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 2.20 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
"2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு' திட்டம் குறித்து வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்புத் துறை ஆலோசனை நடத்தி வருகிறது என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.

0 comments:

Post a Comment