Friday, August 29, 2014

துபையில் தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.47.2 லட்சம் முகமதிப்பு கொண்ட இந்திய கள்ள நோட்டுக்களை விற்க முயன்ற 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
அந்த நால்வரும், கள்ள நோட்டுகளைக் கொண்டு அந்தத் தொழிலதிபரிடம் பொருள்களை வாங்கச் சென்றதாகவும், திடீரென மனதை மாற்றிக் கொண்ட அவர்கள், ரூ.47.2 லட்சம் முகமதிப்பு கொண்ட அந்த ரூபாய் நோட்டுகளை வெறும் 1.4 லட்சம் திர்ஹாமுக்கு (ரூ.23 லட்சம்) விற்பனை செய்ய முன் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமுற்ற அந்த தொழிலதிபர், போலீஸாருக்கு தகவல் தெரியப்படுத்தவே, அந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""வங்கிகள், செலாவணி மாற்று மையங்களில் கூட கண்டுபிடிக்க முடியாத வகையில் அந்த கள்ள நோட்டுகள் மிக நேர்த்தியாக அசலைப் போலவே அச்சிடப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அந்த நால்வரைப் பற்றியும் அந்தத் தொழிலதிபர் பற்றியும் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

0 comments:

Post a Comment