Friday, August 29, 2014

ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்பான ஆபாச இணையதளங்களை முடக்க கோரி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது பதில் அளித்துள்ள மத்திய அரசு, இது போன்ற ஆபாச இணையதளங்களின் சர்வர்கள் வெளிநாடுகளில் உள்ளது. இதனால் கட்டுப்படுத்துவதில் சில பிரச்னைகள் உள்ளன. இத்தகைய பிரச்னைகளை தீர்க்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

இதனையடுத்து, பிரச்னை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் அறிக்கையை 6 வார காலங்களில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment