Saturday, August 9, 2014

வாகா: ஜம்மு கஷ்மீரில் உள்ள செனாப் ஆற்று வெள்ளத்தில்  அடித்துச் செல்லப்பட்டு, பாகிஸ்தானின் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட, இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர் சத்யஷீல் யாதவை பாகிஸ்தான் ராணுவம் நேற்று விடுவித்தது. 48 மணிநேரம் பாகிஸ்தான் பிடியில் இருந்த சத்யஷீல் யாதவ் நேற்று மாலை வீடு திரும்பினார். பின்னர் அவர் கூறும் போது பாகிஸ்தானில் தான் கண்ணியமாக நடத்தப்பட்டதாகவும், பாதுகாப்பாக இருந்ததாகவும் தெரிவித்த்தார். மேலும் நல்ல உணவு வழங்கப்பட்டது. நான் மகிழ்ச்சியாகவே உள்ளேன் என்று கூறினார்.

0 comments:

Post a Comment