Saturday, August 30, 2014

ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டில் பெரியவர்களைவிடப் பிள்ளைகள் கில்லாடிகளாக இருக்கின்றனர். ஆனால் ஸ்மார்ட் போன்கள் சிறுவர்களிடம் எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
எப்போதும் ஸ்மார்ட் போன், டேப்லெட் மற்றும் டிவி என டிஜிட்டல் சாதனங்களையே பார்த்துக்கொண்டிருக்கும் பிள்ளைகள் முக உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனை மெல்ல இழந்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
நேருக்கு நேர் பழகும் மற்றும் உரையாடும் வாய்ப்பு குறைவதால் இந்தப் பாதிப்பு என்று லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் பிள்ளைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து நடத்திய இந்த ஆய்வில், ஸ்மார்ட் போன்களை அவர்களிடமிருந்து வாங்கிவிட்டால் பிள்ளைகளிடம் மற்றவர்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment