ரியாத்: பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், சாட் ஆகிய 4 நாடுகளை சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய சவுதி அரேபிய ஆண்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சவுதி ஆண்கள் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்யவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சவுதி அரேபிய ஆண்கள், 4 பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது. இதனால், சவுதி அரேபிய ஆண்கள் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டு வருகின்றனர்.
இப்படி திருமணமாகி சவுதிக்கு வந்த வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி விட்டது. இந்நிலையில், தங்கள் நாட்டு ஆண்கள் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்வதை கட்டுப்படுத்த சவுதி அரசு ஆலோசனை மேற்கொண்டு பல அதிரடி நடவடிக்கை களை எடுத்துள்ளது. அதன்படி, சவுதி நாட்டு ஆண்கள் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் மற்றும் சாட் ஆகிய நாடுகளை சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.மற்ற நாட்டு பெண்களை திருமணம் செய்வதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன்படி, 25 வயது பூர்த்தியான ஒருவரே இனி வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்ய அனுமதிக்கப்படும். திருமணம் செய்யப்போகும் பெண்ணை அதிகாரிகள் முன் ஆஜர்படுத்த வேண்டும்.முதல் மனைவிக்கு ஏற்பட்ட நோய் தாக்குதல், குழந்தை பெற இயலாமை போன்ற பிரச்னைகளுக்காக, ஒரு வெளிநாட்டு பெண்ணை இரண்டாவதாக மணக்க விரும்பினால், அதற்கான மருத்துவ ஆதாரங்களை காட்ட வேண்டும் என்று பல விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளதாக மெக்கா போலீஸ் அதிகாரி ஆசாப் அல் குரேஷி கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment