Saturday, August 9, 2014

ஒருவர் அதிக பதற்றத்துடன் காணப்படுவதற்கும், அவர் பேஸ்புக் போட்டோ பகிர்வுகளுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும். இது குறித்து லண்டனில் ஒரு ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது, ‘ஒருவர் அதிகமான பதற்றத்துடன் காணப்படுவதற்கும், அவரது பேஸ்புக்கில் புகைப்படங்களை மிக அதிக அளவில் ஏற்றம் செய்வதற்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிறர் நம்மை கண்டுக்கொள்ள வேண்டும் என்றும், அதிகமான “லைக்ஸ்” வேண்டும் என்றும் எண்ணுபர்களே அதிக அளவில் போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றுகின்றனர்’ எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், அவர்கள் பிறரிடம் சகஜமாகப் பழகுவதில்லை என்றும், சமூக வலைதளங்களில் தங்கள் எண்ணங்களை எடுத்துரைப்பதில் சிறந்தவராகவும் இருப்பதில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகஜமாக பழகுபவர்கள் மற்றும் பதற்றமானவர்கள்:
அவர்கள் எப்போதும் தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர் என்பதை ஆய்வை மேற்கொண்ட பிரிட்டன் வேல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்விற்காக அய்வாளர்கள் 17 வயது முதல் 55 வயது வரை கொண்ட 100 பேரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அவரது தோற்றத்தைப் பற்றி அவரது சுய கருத்து உள்ளிட்ட கேள்விகள் அவர்களிடம் கேட்டக்கப்பட்டன. அதன் பின்னர், இவர்கள் எப்படி புகைப்படங்களை அப்லோட் செய்கிரார்கள், ஃபேஸ்புக் நன்பர்களிடம் எப்படி உரையாடுகிறார்கள் என ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
அய்வின் முடிவில் தெரிந்தது என்னவென்றால், இவர்கள் தங்களது சமூகத்திடையே அதிகமான அங்கீகாரத்தையும், மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதிற்குமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment