Thursday, September 25, 2014

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான, லிபிரியா, கினியா, சியோரன் உள்பட 5 நாடுகளில்  எபோலோ வைரஸ் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இந்த நோய்க்கு இது வரை 2,917 பேர் பலியாகி உள்ளனர்.6,263 பேர்  பாதிக்கபட்டு உள்ளனர்.

என உலக சுகாதார  அமைப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.  இந்த நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு படுக்க படுக்கைகள் தட்டுப்பாடாக உள்ளது. லிபிரியா நாட்டில் 1550 படுக்கைகள் தேவைப்படுகிறது.

கினியாவில் பாசன்கோனி என்ற  பகுதி மக்கள்  எபோலோ வைரஸ் நோய் மருத்துவ குழு நகருக்கு உள்ளே நுழைய முடியாதவாறு சாலையை மூடி வைத்து உள்ளனர். இத்தகவலை உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது..

0 comments:

Post a Comment