Thursday, September 25, 2014


 இவ்வளவு நாள் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கே என்று ஆச்சரியப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் கட்சி என்ற லெட்டர் பேட் கட்சியிடமிருந்து கண்டன அறிக்கை வந்துள்ளது...
விதார்த் நடித்துள்ள ஆள் படம் இந்தியில் வெளியான அமீர் படத்தின் தழுவல். வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் முஸ்லீம் இளைஞனின் தாய், தங்கையை பிணை கைதியாக வைத்து, அவனை சில தீவிரவாத செயல்களுக்கு உட்படுத்துகிறது ஓர் தீவிரவாத இயக்கம்.
இந்தப் படத்துக்கு மலேசியா மற்றும் இஸ்லாமிய நாடுகள் பல தடை விதித்தன.
 இந்நிலையில் தமிழகத்திலும் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மேற்கண்ட லெட்டர் பேட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. 
இரண்டு நாள் போனால் படம் மொத்த தியேட்டரிலிருந்தும் தூக்கப்பட்டுவிடும். அவசரப்பட்டு ஒரு அறிக்கையை வீணடித்துவிட்டனர்.

0 comments:

Post a Comment