Tuesday, September 30, 2014

அதிக நேரம் தூங்குவது சில சமயங்களில் நல்லதாக தெரிந்தாலும், ஆனால் உடலில் பல மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும்.

இன்றைய அவசர உலகில் அங்கும், இங்கும் ஓடிக் கொண்டுதான் இருக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் கட்டாயம் 6-7 மணி நேரம் தூக்கம் அவசியம், பல நேரங்களில் அயர்ந்து தூங்கி விடுவோம்.

சில வேளையில் நல்லதாக தெரிந்தாலும், நம் உடலில் பல மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

நாள் முழுவதும் சோம்பலாக இருப்பதுடன், அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என ஆய்வுகள் கூறுகிறது.

கண்களுக்கு கீழே வீங்கி இருப்பதுடன், அளவுக்கு அதிகமான தூக்கம் இதயத்திற்கு நல்லதல்ல.

சர்க்கரை நோய், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் இதய நோய்களே அதிகமாக தூங்குவதற்கு காரணமாக உள்ளது.

நீங்கள் அளவுக்கு அதிகமாக தூங்கும் போது, உங்கள் உடல் ஒரே நிலையில் தான் பல மணி நேரம் இருக்கும். நாளடைவில் உங்கள் உடல் இதற்கு பழக்கமாகி விடுவதால், ஆரோக்கியமான வாழ்க்கை என்பது கேள்விக் குறியாகிவிடும்.

0 comments:

Post a Comment