Wednesday, October 29, 2014

தாய்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவ – மாணவியரை இணைத்து கலப்பு கேளிக்கை விருந்தொன்றை ஏற்பாடு செய்தமைக்காக தேடப்பட்டு வந்த பிரதான நபர் கைது செய்யப்பட்டு அவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டணையும்500 கசையடிகள் தண்டணையும் தாய்ப் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கேளிக்கை விருந்தில் கலந்து கொண்ட ஏனைய ஐந்து ஆண்களுக்கு தலா 99 கசையடியும் எட்டு மாத சிறைத்தண்டணையும் வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த தண்டணை பல்கலைக்கழக வளாகத்திலேயே நிறைவேற்றப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான ஒரு ஏற்பாடு இடம்பெறுவதாக அறிந்த முதவா பிரிவினர் அங்கு சென்று இதைத் தடுத்து நிறுத்தியதோடு சந்தேக நபர்களை நீதிமன்றில் ஒப்படைத்து தண்டணையையும் பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment