Wednesday, October 29, 2014

தமிழக ஊடகங்கள் எங்கோ ஒரு மூளை யில் ISIS இயக்கத்தினர் பயிற்சி எடுக்கிறார்கள், தாலிபான்கள் பயிற்சி எடுக்கிறார்கள் என்று பக்கம் பக்கமாக எழுதும் ஊடகங்கள்…

இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான RSS ன் தலைமை அலுவலகமான நாக்பூரில் RSS இயக்கத்தினர் ஆயுத பயிற்சி எடுக்கிறார்கள். RSS ன் பெண்கள் பிரிவான துர்காவாகினியும் ஆயுத பயிற்சி எடுக்கிறார்கள்.ஆனால் அதை பற்றியும் ஒரு நாள் கூட செய்தி வரவில்லையே ? அது ஏன் ? தினத்தந்தி, தினமலர், தினமணி, தினகரன் உள்ளிட்ட நாளிதழ்களில் ஒரு நாள் கூட இது மாதிரியான செய்திகள் வந்ததாக தெரியவில்லை.

 இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் உண்மை செய்திகளை வெளியிட ஒருபோதும் தயங்க கூடாது.முஸ்லிம்களை பற்றி எவ்வளவு தரக்குறைவாக எழுதினாலும் முஸ்லிம்கள் சகித்து கொள்வார்கள், அதிகபட்சமாக பேரணி, ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம், மாநாடு என்று நிறுத்திக் கொள்வார்கள்.ஆனால் RSS பற்றி ஒரு வரி உண்மையை எழுதிவிட்டால் பத்திரிக்கை அலுவலகத்தை RSS இயக்கத்தினர் சூறையாடி தீ வைத்து கொளுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக ஊடகங்கள் உண்மையை எழுத மறுக்கிறது.
 
அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் செய்த வாட்டர் கேட் ஊழலை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டி அவரை அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கி வீச வைத்தது ஊடகம்.தமிழக கர்நாடக எல்லையில் வீரப்பன் பதுங்கியிருந்த போது காவல்துறையும், ராணுவமும் நுழைய முடியாத காட்டின் உள்ளே நுழைந்து வீரப்பன் என்பவர் யார் என்பதை உலகுக்கு காட்டியது ஊடகம்.அனைத்து சாமியார்களின் காம லீலைகளையும் வெளியுலகுக்கு காட்டி செக்ஸ் சாமியார்களை தோலுரித்து காட்டியது ஊடகம்.

ஆனால் RSS ன் ஆயுத பயிற்சியை மட்டும் பகீரங்கப்படுத்த மறுப்பது ஏனோ ?இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்கள் தம்முடைய கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.

0 comments:

Post a Comment