ஏற்கனவே இந்த மின் வணிக (e commerce) நிறுவனங்கள் வந்தபின். கடைத்தெரு போய் பல கடைகள் ஏறி இறங்க வேண்டாம். அதனாலயே வீட்டுல இருந்த படியே கண்டதையும் வாங்கிகிட்டு இருக்கோம். மின் வணிகத்துல வாங்கும் பொருட்களின் தரத்தினை நாம ஏற்கணவே ஒரு கட்டுரையில் பார்த்தோம்.
நம்மை இன்னும் சோம்பேறியாக்க புதுசா ஒரு வழி அறிமுக படுத்த போராங்க. என்ன தான் ஆன்லைன்ல வாங்குனாலும் நாம ஒரு நிறுவனம் சொல்லி இருக்க விலை கொடுத்து அப்படியே வாங்க மாட்டோம். நாலு கடை விசாரிப்பதைபோல், அமெசான்ல என்ன விலை, ஃபிளிப்கார்ட்ல என்ன விலை என்று பல இணைய தளங்களைப் போய் பார்ப்போம். ஒவ்வோரு இணையதளமாக போய் பார்க்க சோம்பல் படும் நாம் சில நேரம் Junglee போன்ற இணையதளங்களுக்கு செல்வோம். ஆனால் இதுவும் இனி தேவைல்லை என வருகிறது புதிய வழி.
இதன் பெயர் MakkhiChoose இணைய உலாவியின் ஒரு நீட்சியாக (extension) இதனை இணைத்துகொள்ள வேண்டும். இணைப்பதனால் வணிக தளத்தில் சென்று நாம் பொருட்களை தேர்வு செய்யும் போது அந்தபக்கத்தின் ஒரத்தில் நீல நிற பொத்தானை கொண்டிருக்கும். இந்த பொத்தனை அழுத்தும் போது மற்ற இணையதளக்களில் அதை விட சிறந்த தள்ளுபடி இருக்கிறதா என தேடும். ஒரு வேலை அப்படி இதைவிட குறைந்த விலை இருந்தால் பொருட்களின் கீழ் எழுத்து வடிவில் காட்டும் நாம் அடுத்த பொத்தானை அழுத்தி அந்த பக்கத்திற்க்கு செல்லலாம்.
இந்த MakkhiChoose மூன்று பொத்தான்களை கொண்டுள்ளது. அவை Price Alert, Check Price, மற்றும் Coupons ஆகியனவாகும். இதில் Price Alert பொருட்களின் விலையை நமக்கு அனுப்பும். Check Price மற்ற தளங்களில் உள்ள விலையை ஒப்பிட்டு காட்டும். Coupons ஆனது மற்ற தளங்களில் உள்ள தள்ளுபடி மற்றும் பரிசுகள் பற்றிய செய்திகளை தரும்.
MakkhiChoose மற்றும் PriceKart போல buy Hatke என்ற ஒன்றும் இருக்கிறது. இது அவை இரண்டும் கொண்டுள்ள எல்லாவற்றையும் கொண்டிருத்தாலும். அவற்றை விட சிறந்த தகவல் நிலையத்தை (database) கொண்டுள்ளது. இது கூடுதலாக விலை பட்டியளில் கடந்த காலத்தில் அதன் விலை என்னவாக இருந்தது என்ற வரலாற்றையும் கொண்டுள்ளது. இதன் மூலம் அந்த பொருள் 1500 ரூபாய் பதிப்புள்ளதுதான் இந்த மூன்று நாள் தள்ளுபடியில் மட்டும் 250 ரூபாய்க்கு கிடைகிறது என நாம் உறுதிபடுத்தி கொள்ளலாம். பிக் பில்லியண் டேவில் முந்தைய நாள் விலை ஏற்றியது போல ஏற்றி எமாற்ற முடியாது.
இந்தியாவில் உள்ள 70 வது மின் வணிக தளங்களில் உள்ள தகவல்களை இது கொடுக்கும். ஒவ்வோரு இணையதளங்களாக நாம் செல்ல வேண்டியதில்லை. கடைத் தெருவில் நடந்து செல்லும் போது பொருட்களின் விலையை விசாரிப்பது போல, இணைய உலாவியை திறக்கும் போதெல்லாம் இந்த வணிக தளங்களில் விலைகளை விசாரிப்போம். அமெசானை விட ஃபிள்ப்கார்டில் விலை குறைவு என்றும். இன்று இந்த தள்ளுபடி இருக்கிறது என்று பொருட்களை தேவை இல்லாமல் வாங்க தயாராவோம். எப்படியிருந்தாலும் கல்லா கட்ட போறது கம்பெனிகாரங்கதான்.
-பன்னீர் பெருமாள்

0 comments:
Post a Comment