Sunday, December 21, 2014

ஜித்தா, சவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் ஷியா பிரிவினரின் ஆதிக்கம் நிறைந்த அவாமியா கிராமத்தில் சமீபத்தில் ஒரு போலீஸ்காரரை துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் ராணுவம், நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

அப்போது, ராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டனர். உடனே ராணுவத்தினரும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்து. முடிவில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த தகவலை, அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

0 comments:

Post a Comment