Saturday, December 13, 2014

கடந்த 11.12.2014 அன்று அயோத்தி பல்கலைகழக விழாவில் பங்கேற்ற உ.பி மாநில கவர்னர் ராம் நாயக் அவர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது அனைத்து இந்தியர்களின் விருப்பம் என்றும் ராமர் கோயில் கட்ட மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 ஜனநாயக நாட்டில் மதச்சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்த பொறுப்பேற்றுக்கொண்ட உ.பி மாநிலத்தின் கவர்னர் மதச்சார்புள்ள கருத்துக்களை பரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

BJP-யின் MP-க்களும், அமைச்சர்களும், தலைவர்களும் இது போன்ற கருத்துக்களை கூறி வந்த நிலையில் உ.பி மாநில கவர்னரின் இந்த பேச்சு RSS-ன் கொள்கைகளை பிரதிபலிப்பதாகவே உள்ளது. 

எனவே, நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு உறுதிபூண்ட மாநில கவர்னரின் இந்த செயலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிப்பதோடு அவரை கவர்னர் பதவியிலிருந்து நீக்கவும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களை கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு

A.ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

0 comments:

Post a Comment