சவுதி அரேபியா தனது நிதிநிலை அறிக்கையில் எந்த அளவுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை ஏறபடக் கூடும் என்பது குறித்த முழுமையானத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாட்டின் முக்கிய ஏற்றுமதியான மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்து வருவதை அடுத்தே சவுதி அரேபியா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு தமது பொருளாதாரப் பற்றாக்குறை 38 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என்று அரச தொலைக்காட்சியில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சவுதி அரேபியாவின் வரவு செலவு திட்டத்தில் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படுவது இதுவே முதல் முறை.
எனினும் சவுதியின் சரித்திரத்தில் இந்த அளவுக்கு வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழுவதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆனால் தமது செலவினங்களில் எந்தக் குறைப்பும் இருக்காது என்று அரசு கூறியிருப்பதானது, சிக்கன நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமலேயே, எண்ணெய் விலை வீழ்ச்சியிலிருந்து அரசு மீண்டுவிடும் என்னும் நம்பிக்கையை காட்டுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

0 comments:
Post a Comment