தமிழகத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியல் வரும் 5ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகிய பணிகள் முடிந்து இறுதிப்பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகிய பணிகளுக்காக கடந்த ஆக்டோபர் 26 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
புதிதாக பெயர் சேர்க்க 6 லட்சத்து 17 ஆயிரத்து 844 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், பெயர் நீக்கத்திற்காக 9 ஆயிரத்து 229 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்டு, வரும் 5ஆம் தேதி தமிழகத்தின் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

0 comments:
Post a Comment