Friday, January 10, 2014

Introduction to special pistol for womenஇந்தியாவில் பெண்களுக்காக தயாரிக்கப்பட்ட மிக சிறிய கைத்துப்பாக்கி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பலியானார். அன்று முதல் இன்று வரை இந்தியாவில் பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என்னும் கருத்து நிலவிவருகிறது. 
இந்நிலையில், கான்பூரில் உள்ள இந்தியன் ஆர்ட்னான்ஸ் தொழிற்சாலை
பெண்களுக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கைத்துப்பாக்கியை அறிமுகப்படுத்தியுள்ளது.
டைட்டானியம் அலாயில் 500 கிராம் எடையில், .32 திறனுடன் கூடிய கைத் துப்பாக்கி இந்தியாவில் பெண்களுக்கென முதன் முதலாக தயாரிக்கப்பட்டு கடந்த 6ஆம் தேதி வெளியிடப்பட்டது. 1,22,360 ரூபாய் விலை கொண்ட இந்தத் துப்பாக்கி ‘நிர்பீக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தத் துப்பாக்கியைப் பெறுவதற்காக 20 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்த விசாரணைகள் சுமார் 80க்கு மேல் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்துள்ளவர்களில் 80 சதவிகிதத்தினர் பெண்கள் என்று ஐஓஎப் பின் பொது மேலாளர் அப்துல் ஹமீது தெரிவித்தார்.
சிறிய அளவிலான இந்தத் துப்பாக்கியின் எளிய அமைப்பும், வேலைத்திறனும் பெண்களின் கைப்பையில் வைத்துச் செல்லும் அளவில் வசதியானதாக உள்ளது என்பதும் பெண்களை கவர்வதற்காக இக்கைத்துப்பாக்கி அழகிய வெல்வெட் பெட்டியில் வைத்து தரப்படும் என தெரிவிக்கபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment