
சென்னை: வரும் பிப்ரவரி 28 க்குள் அனைவருக்கும் வாக்காளர் அட்டை வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் செலவுகள், அதற்கான விதிகள், வரைமுறைகள் குறித்த அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அப்போது தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேசியதாவது:
"தற்போது வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் ‘பிரிண்ட்’ ஆகி தயார் நிலையில் உள்ளது. வருகிற பிப்ரவரி 28ந் தேதிக்குள் அனைவருக்கும் கொடுக்கப்படும். மேலும், ஆங்காங்கே அமைக்கப்படும் ஓட்டுப்பதிவு முகாமிலும் சென்று பெற்றுக்கொள்ளலாம். தேர்தல் ஆணையத்தில் 20 சதவீதம் வாக்காளர்களின் செல்போன் எண்கள் பதிவாகியிருக்கின்றன.
பதிவாகி உள்ள அனைவருக்கும் ஓட்டுப்பதிவு முகாம், ஓட்டுப்பதிவு எண் போன்றவை சம்பந்தமாக அனைத்து தகவல்களும் அனுப்பப்படும்."
மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தேர்தல் ஆணையத்துக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்கள். ஆனால், அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்திருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்
கூட்டத்தில் இந்திய தேர்தல் கமிஷனின் பொது இயக்குனர் (தேர்தல் செலவுகள்) பி.கே.தாஷ், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் இக்கூட்டம் நடைபெற்றது.
0 comments:
Post a Comment