Wednesday, February 19, 2014




  budget

தற்போதைய பட்ஜெட்டில் சிறுபான்மைத் துறை அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டை விட 19 சதவீதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.சிறுபான்மைத் துறை அமைச்சகத்திற்குகடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூபாய் 3,511 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது 2014 – 2015 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அந்த துறைக்கு ரூபாய் 3, 711 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுபான்மையின சமூகத்திற்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ரூபாய் 4000 கோடி முதல் 66,500 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது என்று இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாராளமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது 10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணிஆட்சிக்கு முன் 121 மாவட்டங்களில் சிறுபான்மைச் சமூகத்தின் வங்கி கணக்கு வெறும் 1, 415,000 என்றும் ஆனால் கடந்த மார்ச் 2013 இறுதியில் அது 4,352, 000 உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் சிறுபான்மையின சமூகத்திற்கு வழங்கப்படும் நிதி உதவி ரூபாய் 4000 கோடி முதல் 66,500 கோடி அளவிற்கு உயர்ந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் ரூபாய் 211, 451 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment