Monday, February 17, 2014

மோடி, ராகுலுக்கு கெஜ்ரிவால் கோரிக்கை! 
புதுடெல்லி: மோடி, மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது முதல்வர் பதவியை ராஜினாம செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் அம்பானி குறித்து காரசாரமான கருத்தை வெளியிட்டுள்ளார் கெஜ்ரிவால். அதில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஆம் ஆத்மி கட்சிக்கும் அம்பானிக்கும் இடையேயானது அம்பானியின் முகவர்களாக மோடியும், ராகுலும் செயல்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார். மேலும்  நரேந்திர மோடி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அதானி நிறுவனத்துடனான தொடர்பு குறித்துவிளக்கமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக இயற்கை எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை ராகுல்காந்தி ஆதரிக்கிறாரா என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே  காஸ் விலை நிர்ணய முறைகேடு தொடர்பாக புகார் கூறிய கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர முகேஷ் அம்பானி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது..

0 comments:

Post a Comment