Thursday, February 20, 2014

05cbjescinemato_CM_1749926g
புதுடெல்லி:முஸஃபர் நகரில் சங்க்பரிவாரம் திட்டமிட்டு நடத்திய முஸ்லிம் இனப்படுகொலையின் உண்மையான காரணங்களை வெளிக்கொணரும் கோபால் மேனனின் ஆவணப்படம் நேற்று(18/02/2014) டெல்லி ப்ரஸ் க்ளப்பில் நடந்த நிகழ்ச்சியில் முதன் முதலாக திரையிடப்பட்டது.
அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் அநாதைகளாக்கப்பட்ட கலவரத்தில் ஜாட்டுகளை தீவிரமாக பங்கேற்க தூண்டிய ஜாட் மஹா பஞ்சாயத்தின் காட்சிகளுடன் ஆவணப்படம் துவங்குகிறது.கமண்ட்ரியை தவிர்த்துவிட்டு காட்சிகளும், பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களையும் விவரிக்கும் வகையில் ‘த கில்லிங் ஃபீல்ட் ஆஃப் முஸஃபர் நகர்’ என்ற 48 நிமிடம் நீண்ட ஆவணப்படத்தை கோபால் மேனன் தயாரித்துள்ளார்.
ஜாட் மஹா பஞ்சாயத்தில் திரண்ட வன்முறை வெறிக்கொண்ட மக்கள் கூட்டம் ஆயுதங்கள் ஏந்தி முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்புவதும், தலைவர்கள் கலவரம் நடத்த ஊக்குவிப்பதையும் காணலாம்.
இடிக்கப்பட்ட வீடுகள், அனைத்தும் இழந்த அகதிகள், அவர்கள் தங்கியிருக்கும் அகதி முகாம்களின் பரிதாபகரமான நிலை ஆகியன ஆவணப்படம் மூலம் வெளிச்சத்திற்கு வருகிறது.ஜாட் இனத்தவர்கள் தங்களுக்கு எதிராக எவ்வாறு திரும்பினார்கள் என்பதை அனுபவம் கொண்டவர்கள் விவரிக்கின்றனர்.கலவரத்தை தடுப்பதில் தோல்வியை தழுவிய அரசு, பின்னர் சாதாரணமான இழப்பீட்டை வழங்கி முகாம்களை விட்டு வெளியேற்ற மிரட்டிய சம்பவங்களையும் முகாம்களில் உள்ளவர்கல் விவரிக்கின்றனர்.
முஸஃபர் நகர் முகாமில் துயர் துடைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு மனித உரிமை மற்றும் சமூக அமைப்புகள், பாரத் கிஸான் யூனியன் ஆகியவற்றின் தலைவர்கள் அளிக்கும் பேட்டிகளும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
முஸ்லிம் எதிர்ப்பு திட்டத்தின் மூலம் ஆட்சியை பிடிக்கும் வழக்கமான தந்திரத்தை முஸஃபர் நகர் கலவரம் மூலம் பா.ஜ.க திட்டமிட்டதாக ஆவணப்படத்தின் இயக்குநர் கோபால் மேனன் தெரிவித்தார்.அயோத்தியா யாத்திரை நடத்தி வகுப்புவாத ஆதாயம் தேடுவதற்கான முதல் முயற்சி, அனுமதி மறுக்கப்பட்டதால் தடைப் பட்டது.பின்னர் முஸஃபர் நகர் கலவரத்தை திட்டமிட்டு நடத்தியுள்ளனர்.நரேந்திரமோடியும், அமித் ஷாவும் இணைந்து தீட்டிய சதித்திட்டத்தையே முஸஃபர் நகரில் கண்டோம்.உண்மையான காரியங்களை மட்டுமே காட்சிப்படுத்தவேண்டும் என்று விரும்பியதால் கமெண்ட்ரியை கூட நீக்கிவிட்டு காட்சிகள் மூலம் சம்பவத்தை விவரிக்க முயற்சித்ததாக கோபால் மேனன் தெரிவித்தார்.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த ஆவணப்படம் வரும் நாட்களில் திரையிடப்பட உள்ளது.

0 comments:

Post a Comment