Saturday, February 22, 2014

aap symbol in color
போலியான ஆவணங்கள் மூலம் ஆம் ஆத்மி கட்சி தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் எனவே அக்கட்சியின் பதிவை தோ்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் எனவும் டெல்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில் இந்த வழக்கு நிறைவு பெறும் வரை வரும் நாடாளுமன்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

1989 மற்றும் 1991-ல் டெல்லியின் கிழக்கு பகுதியில் நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிட்ட ஹன்ஸ் ராஜ் ஜெயின் இம்மனுவை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அவர் அம்மனுவில்,”ஆம் ஆத்மியின் கட்சிப் பதிவு தவறான மற்றும் பொய்யான ஆவணங்களால் அவசர அவசரமாக முறையான விசாரணையின்றி தோ்தல் அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தோ்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்பட்டுள்ளது.சிலரின் தூண்டுதல் மற்றும் அழுத்தத்தினால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வேறு எந்த கட்சிக்கும் இவ்வளவு விரைவாக அனுமதி வழங்கப்பட்டது இல்லை.
சில ஆம் ஆத்மி உறுப்பினர்கள் கொடுத்துள்ள ஆவணங்களில் உள்ள முகவரிகள் அவர்களது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள முகவரியோடு வேறுபட்டுள்ளது.எனவே தோ்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஆவணங்களி்ன் மீது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் சமர்ப்பித்த ஆவணங்களை சரியாக உறுதி செய்யாத தோ்தல் துறை அதிகாரிகள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment