
கடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் வங்கிக் கடனுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், “சிறுபான்மையினருக்கு வங்கிக் கடன் வழங்குவதற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 3,711 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 14 லட்சத்து 15 ஆயிரமாக இருந்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, தற்போது 43 லட்சம் 52 ஆயிரமாக அதிகரித்துள்ளன. இது சிறுபான்மையின மக்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்துள்ள சாதனையாகும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிறுபான்மையினருக்கு வங்கிக் கடன் வழங்க ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. அது தற்போது ரூ. 65,500 கோடியாக அதிகரித்துள்ளது என்றார் ப. சிதம்பரம்.
இதனிடையே, மக்களவையில் இடைக்கால பட்ஜெட் தொடர்பாக ப. சிதம்பரம் ஆற்றிய உரையில், சிறுபான்மையினர் தொடர்பாக இடம்பெற்றிருந்த புள்ளி விவரங்களை பிரதமர் அலுவலகம் பின்னர் டுவிட்டரில் வெளியிட்டது.
0 comments:
Post a Comment