ஆலப்புழா(கேரளா): வகுப்புவாத விஷம் கலந்த வெறித்தனமான உரையை நிகழ்த்தி ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான விசுவஹிந்து பரிஷத்தின் சர்வதேச பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முஸ்லிம் மக்கள் தொகையை பெருக்கி மலபாரை ஒரு முஸ்லிம் மாநிலமாக மாற்றக்கோரினால் முஸஃபர் நகரும், குஜராத்தும், கொக்ராஜரும் நிகழும் என்று தொகாடியா மிரட்டியுள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் எஸ்.டி.வி பள்ளிக்கூட மைதானத்தில் நடந்த பஜ்ரங்தள் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் மாநில பிரதிநிதிகள் மாநாட்டின் ஒரு பகுதியாக ஹிந்து ஸ்வாபிமான் மாநாட்டை துவக்கி வைத்து பிரவீன் தொகாடியா உரையாற்றினார். பிரவீன் தொகாடியா வகுப்பு வாத விஷம் கலந்த உரையை நிகழ்த்தும்போது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான போலீஸார் அதனைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
தொகாடியா தனது உரையில் மேலும் கூறியது:
மலபாரில் தனி மாநிலத்திற்காக கோருபவர்கள் குஜராத்தும், முஸஃபர் நகருக்காகவும் காத்திருக்கவும். முஸ்லிம் லீகும், பாப்புலர் ஃப்ரண்டும் ஒரே லட்சியத்திற்காக பாடுபடுகின்றார்கள். தனி முஸ்லிம் மாநிலம் கோரும் முஸ்லிம் லீக் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும். இனியொரு ஜின்னாவுக்கு இந்தியாவில் இடமில்லை. இஸ்லாமிய தேசத்திற்காக வாதிடும் முஸ்லிம்கள் காந்திக்கு அல்ல தொகாடியாவிடம் பதில் அளிக்கவேண்டும் என்பதை அவர்கள் நினைவில் நிறுத்தவேண்டும்.
முஸ்லிம் லீகின் அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்துச் செய்யவேண்டும். பண வீக்கத்திற்கும், விலைவாசி உயர்வுக்கும் காரணம்,முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கமாகும். இதனால் துயரத்தை ஹிந்துக்கள் அனுபவிக்கின்றார்கள்.
மதசார்பற்ற இந்தியாவாக நீடிக்க பொது சிவில் சட்டத்தை அமலாக்கவேண்டும். ராமர்கோயில் கட்ட பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவேண்டும். பாரதத்தின் அரசியலை காவிமயமாக்கவேண்டும். இக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் தனபாலன் தலைமை வகித்தார். வி.ஹெச்.பி தலைவர்கள்,சன்னியாசிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment