Sunday, February 23, 2014

 
 VKALATHURPARVAI 

கை விலங்கு மாட்டி அழைத்து செல்லப்படுவது யார் தெரியுமா ?.
ஆட்சி மாற்றம் கோரும் குழுவின் தலைவியை அல்ல !

மாறாக ஒரு கொலையாளியை !
( Miranda Barbour என்ற வாஷிங்டன் நகரை சேர்ந்த 19 வயது பெண் !)
எத்தனை கொலை செய்தவர் தெரியுமா ?
சும்மா ஒரு 22 பேரை !
ஏன் தெரியுமா ?
தான் சிறுமியாக இருக்கும் போது ஒரு மனித மிருகத்தால் சீரழிக்கப்பட்ட போது, தான் பெரிய பெண்ணானதும் 100 பேரை கொலை செய்வதாக சபதம் எடுத்தாராம் !. ஆனால் 22 பேரை மட்டும் தான் அவரால் கொலை செய்ய முடிந்ததாம்.
எப்படி கொலை செய்தார் தெரியுமா ?
ஆன்லைன் சாட்டிங்கில் பெண்களை தேடக் கூடிய வக்கிர எண்ணம் கொண்ட அதுவும் பணக்காரனாக இருக்கக் கூடியவரை வலைவீசி சாட்டிங் மூலமாக சிக்கியவருடைய சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி அல்லது பெரும் தொகையை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டு வேலையை முடித்து விடுவாராம் ?. இதற்கு இவருடைய கணவன் உடந்தையாம்.
படிப்பினை :
வேலை நேரம் போக அல்லது வேலை நேரத்திலேயே ஆன்லைனில் இருக்கக் கூடியவர்களுக்கு இதில் பெரும் படிப்பினை இருக்கிறது அதனால் தான் இதை எடுத்து எழுதுகிறோம்.
இதெல்லாம் அமெரிக்காவில் சகஜம் தான் என்றாலும், ஆன்லைன் சாட்டிங்கில் அமெரிக்காவில் மட்டும் சோரம் போகவில்லை இந்தியாவிலும் தான். உள்ளதை எல்லாம் உருவிக்கொண்டு வெறும் கோவனத்துடன் அனுப்பிய நிகழ்வுகள் ஏராளமாக நம்நாட்டிலும் நடந்துள்ளன.
அதனால் இணயத்தில் இருக்கும் போது பெண்கள் சாட்டிங்கில் hi என்று வந்தால் No என்று ஓடியே விடுங்கள். இது பெண்களுக்கும் தான்.
பொருளாதார இழப்பு :
நாம் ஓடி ஆடி உழைத்து சேர்த்ததை கண்டிப்பாக நமது வாரிசுகள் தான் அனுபவிக்க வேண்டும், மாறாக சம்மந்தமில்லாத யாரோ அல்ல.

0 comments:

Post a Comment