ஜித்தா: சவூதி அரேபியா ஜித்தாவின் சவூதி வர்த்தக சபை மற்றும் இந்திய துணைத்தூதரகம் இணைந்து நடத்தும்
இந்திய தயாரிப்பு பொருட்களின், பொருட்காட்சி மற்றும் பட்டியல் காட்சி குறித்த இந்திய தூதரக அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
"இந்தியாவிற்கும் சவூதிக்கும் இடையேயான வர்த்தக தொடர்பை அதிகரிக்கும் விதமாக இந்தியாவில் தயாரிக்கப்படும், பொருட்களுக்கான பொருட்காட்சி, வரும் பிப்ரவரி மாதம் 27 & 28 இரு தினங்களில் காலை 11:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணிவரை ஜித்தா வர்த்தகசபைக் கட்டிட முதல் மாடியில் நடைபெறவுள்ளது.
இப்பொருட்காட்சி நிகழ்ச்சியில் இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும், ஜவுளி / ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், உணவு பொருட்கள், மின் மற்றும் மின்னணு பாகங்கள், பொதி தொழில், இயந்திரங்கள், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள், எழுது பொருள், மருந்துகள், ரசாயன, மருத்துவ உபகரணங்கள், விவசாயம் போன்ற துறைகளில் பரந்த கையாள்வதில் திறனுள்ள இயந்திரங்களை தயாரிக்கும் இந்திய நிறுவனங்களின் பட்டியல், வீட்டு உபயோக பொருட்கள், கைவினை பொருட்கள், பரிசு பொருட்கள், கட்டுமானங்கள், மற்றும் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்கள் இதில் பங்கு பெறும்.
மேலும், இதன் தொடக்க நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதி காலை 11:00 மணிக்கு தொடங்கும் இதில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறோம்."
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment