Sunday, February 16, 2014


find-jobs-abroad 

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு
இந்திய அரசு தொலைத் தொடர்புத் துறையின் குவைத் நாட்டு திட்டப் பணிகளுக்கு தொலைத் தொடர்புத் துறையில் கட்டுமானப் பணிக்கு சிவில் இன்ஜினியர்கள் மற்றும் டெலிகாம் இன்ஜினியர்களும் எச்.எஸ்.இ., நடைமுறைகள் அறிந்த டெலிகாம் சிவில் இன்ஜினியர்கள், கேபிள் பொருத்துபவர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், ஆட்டோகாட் ஆபரேட்டர்கள், கொத்தனார்கள், கார்பெண்டர்கள், ஸ்கில்டு லேபர்கள், குவைத் ஓட்டுனர் உரிமம் பெற்ற ஊர்தி ஒருங்கிணைப்பாளர்கள், ஊர்தி பழுதுபார்ப்பவர்கள் மற்றும் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள் மற்றும் சமையலர்கள் தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுப்பவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விசா, விமான டிக்கெட், இருப்பிடம், மற்றும் இதர சலுகைள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.
விருப்பமும், தகுதியும் இருப்பின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றுடன் எண். 42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க., தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 32 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment