சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ப்ரூக்ஸ்டோன் நிறுவனம் ஸ்மார்ட்போன்களுக்கு ரிசார்ஜ் செய்யும் ஒரு புதிய கையடக்க பேட்டரியை (பியூவல் செல்) விற்பனை செய்ய இருக்கிறது.
இந்த ரிசார்ஜ் செய்யும் கையடக்க பேட்டரியை லில்லிபுட்டியன் சிஸ்டம்ஸ் தயாரித்திருக்கிறது. இந்த பேட்டரியை ப்ரூக்ஸ்டோன் பெயரிலேயே சில்லரை வர்த்தக முறையில் விற்க ப்ரூக்பான்டிற்கு உரிமையை வழங்கி இருக்கிறது.
இந்த ரிசார்ஜ் செய்யும் பேட்டரி கையடக்கமாக ஒரு ஸ்மார்ட் போன் அளவில் வருகிறது. சிகரட் லைட்டரில் இருக்கும் திரவ கேட்ரிட்ஜைப் போல் இந்த பேட்டரியிலும் உண்டு.
பல நிறுவனங்கள் இதுபோன்ற ரிசார்ஜ் செய்யும் பேட்டரியை களம் இறக்கி இருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை வெற்றி பெறவில்லை. இந்த பேட்டரி யுஎஸ்பி வசதியுள்ள எல்லா ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு ரிசார்ஜ் செய்யு சக்தி கொண்டது.
இந்த ப்ரூக்ஸ்டோன் ரிசார்ஜ் பேட்டரியின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஆன்லைன் மூலமாக ப்ரூக்ஸ்டோன் ஸ்டோர்களில் இதை வாங்கலாம். இந்த ரிசார்ஜ் செய்யும் பேட்டரி கைக்கு அடக்கமாக இருப்பதால் இதை எளிதில் எடுத்துச் செல்லலாம். மேலும் இந்த பேட்டரி 1 டஜன் முறை ஸ்மார்ட் போனுக்கு ரிஜார்ஜ் செய்யும் திறன் கொண்டது.
புதிதாக வரும் இந்த ரிசார்ஜ் பேட்டரி இளையோரின் கவனத்தைக் கவரும் என்பதில் ஐயமில்லை.
0 comments:
Post a Comment