இன்று பலர் பேசும் விடயம் மதமாற்றம் அதனூடாக வரும் இன ஒருமை தளம்பலும் இன்றைய நவீன உலகில் கூட பலருக்கு மதங்கள் உருவாக்கப்பட்டதற்கான காரணத்தை உணராது அதை மிகத் தீவிரமாய் முன்னெடுப்பது ஏற்று கொள்ளத்தக்கதால்ல.
இன்று பலர் நினைக்கும் ஒரு விடயம் பணத்தை காட்டிதான் மதமாற்றம் நடை பெறுகின்றது என்று சாதாரண மக்களை பொருத்தவரை இது முற்றிலும் தவறு ஆனால் பெரும் பணக்காரர்கள் மற்றும் கலை உலகத்தவர் என பலர் மாறுவது முற்றிலும் பணத்தை நோக்கிய ஒரு மாற்றமே ஆகும். இன்று ஏழைகள் பலருக்கு பணத்தை கொடுத்து மாற்றுவதை விட ஒரு பெரும் மக்கள் விருப்பத்துக்குரிய ஒருவரை பணத்தை கொடுத்து மாற்றினால் அவர்களின் மீது விருப்பம் வைத்திருக்கும் அந்த மக்கள் அதன் பால் ஈர்க்கப்படுவார்கள் என்பது பலருக்கு தெரிவதில்லை.இப்படியான மதமாற்றும் முறை ஒன்று இப்போது நடந்து வருகின்றது. அதில் தமிழ் இசை அமைப்பாளர் ஒருவரை அண்மையில் பார்க்கலாம், அதே போல் அமெரிக்காவில் மிகப் பெரும் கறுப்பின கலைஞனும் உலக மக்களின் விருப்பத்துக்குரிய இன்று உயிருடன் இல்லாத அவரை பார்க்கலாம்.
இப்படி மக்கள் செல்வாக்குள்ள மனிதர்கள் தங்களை பணத்துக்காக மதம் மாறுகின்றனர்.
இன்று மலையகத்தில் மற்றும் தமிழ் நாட்டில் பலர் மதங்களுக்கு மாறுகின்றனர் அவர்கள் புதிதாக தோன்றியுள்ள கிறிஸ்தவ மதங்களுக்கு மாறுவதையே அவதானிக்க முடியும். அவர்களின் சூழ்நிலைகளை இவர்கள் சரியாக பயன்படுத்தி கொள்கின்றனர். இப்படியான ஒரு முறையை இவர்கள் கைகொள்வதால் மக்கள் மனோவியல் ரீதியில் அந்த மதத்துக்கு ஆறுதலை தேடியும்,ஆறுதல் கிடைப்பதாயும் உணர்ந்து ஓடிச் செல்கின்றனர்.
மதங்கள் என்பது ஒரு எதிர்ப்புக்குரிய விடயம் இல்லை அது தனிமனித சுதந்திரம் ஆனால் அதை கொண்டு இன விழுமியங்களை அழிக்க முனைவது ஏற்றுக் கொள்ள தக்கதில்லை.ஆனால் மதங்கள் மூலம் அவற்றையே செய்ய அந்த மதங்களை உறுவாக்கினவர்கள் சிந்தித்தார்கள் என்று பலருக்கும் புரியாமல் இருப்பது தான் வேதனை.
இன்றைய நவீன உலகில் எந்தவித அடிப்படை விஞ்ஞான ஆதாரமும் இல்லாதவை தான் மதங்கள். இப்படி யான ஆதாரம் இல்லாத விடயங்களை மனிதர் இந்த நவீன உலகில் நம்புவது மிகப்பெரும் தவறு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மதங்களால் இன்று உருவாக்கப்பட்ட வழிமுறைகளும் மிகப் பெரும் தவறே. அவைகளின் விளக்கங்களை நவீன உலகத்துக்கு ஏற்றவகையில் மாற்றங்களை செய்து விளங்கப்படுத்தினாலும் அவை பொருந்தக் கூடியவை இல்லை. கருத்து என்பது நேரடியாகவும் மாற்றங்களை உணர்ந்து புரிதலான முறையில் வெளிப்படையாய் வடிவமைக்கப் பட்டு இருந்தால் அவை இன்று ஏற்று கொள்ள கூடிய நிலையில் இருந்திருக்கலாம். அப்படியான மிக நேரடியான கருத்துக்களை எந்த மதமும் கொண்டு இருக்கவில்லை என்ற கருத்தை மிக ஆழமாய் அறிய முடிகின்றது இந்த மத புத்தகங்களின் ஊடாக.
இன்றிருக்கும் மனிதன் அமைத்துள்ள மிக நேர்மையான பல வழிகள் உருவாக அவை காரணமாய் இருந்திருக்கின்றன அது ஏற்று கொள்ளத்தக்கது தான். ஆனால் அவைகளை நாம் மனித வளர்ச்சியின் முன்நோடிகளான பரிமான வளர்ச்சியின் ஒரு பகுதியாக பார்க்க முடியுமே தவிர இறைவனால் உண்மையாகவே கொண்டுவரப் பட்ட செய்தியை பார்க்க முடியாது என்பதை உணர வேண்டும். எமது முன்னோர்களை விட இன்று இருக்கும் நாம் சகல வற்றிலும் உயர்ந்தவர்கள் என்பதை புரிய வேண்டும். எம் முன்னோர்கள் வாழ்வு கொடுமையானது கொடியதும் நிறைந்த ஆபத்தான பாதையாகவே இருந்தது. ஆனால் இன்று ஒப்பீட்டு அளவில் மிகப் பெரும் மாற்றங்களை மனித இனம் கண்டு வந்துள்ளது. இனி வரப் போகும் எமது சந்ததிகள் மிக நேர்மையானதும் வல்லமையனதுமாய் தான் வரும். இன்று நாம் கடவுள் என்று ஒருவர் இருந்தால் எப்படி இருப்பார் என்று கட்பனை செய்து பார்கின்றோமோ அதே போல் மனித இனம் அந்த உச்ச நேர்மைக்கு வளர்ந்து வந்தே யாகும். சில வேளையில் பலருக்கு அது கட்பனைக்கு எட்டாத கனியாக இருக்கலாம் ஆனால் அவை நடைபெறும் இவ் உலகில் மனிதர்களிடம்.
மனிதர்கள் நாம் இனம் மதம் என்று பிரிந்து நிற்பது எல்லாம் போய் மனிதர்கள் எல்லாம் ஒன்று என்ற அந்த தத்துவம் வந்து நிற்கும் எம் முன்னே. நாம் அந்த உலக மக்களின் ஒன்றிணைதல் வரவேண்டும் உலகில் என கருதினால் இன்று இனங்கள் சுதந்திரம் மற்றும் அவர்களை மதிக்கும் தன்மை கட்டாயம் வரவேண்டும். அப்படி மற்றவர்களின் இன சுதந்திரத்தை மதித்தால் தான் இன்றைய நிலையில் பிரச்சனைகள் உலகில் குறைந்து மனிதர்கள் அந்த ஒருமை பற்றி சிந்திக்க கூடிய ஒரு மாற்றத்துக்கு வருவார்கள் என்பதை உணர வேண்டும். அதற்கு இந்த ஐரோப்பா அரசாங்கங்களை எடுத்து கொண்டால் புரியும். ஐரோப்பிய நாடுகளுக்குள் எவ்வளவு யுத்த அழிவுகளை செய்தார்கள் ஆனால் என்று அவர்கள் மற்ற ஐரோப்பா நாடுகளின் மக்களின் சுதந்திரத்தை விழுமியத்தை மதிக்க தொடங்கினார்களோ அன்றே அவர்கள் இன இணைவு பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதை புரிய வேண்டும்.
அடிமைபடித்தல் என்றுமே பிரச்சனைகளை அதிகரிக்கும் ஒழிய சமாதனம் மக்கள் ஒன்றிணைவு பற்றி சிந்திக்க தூண்டாது.
நாம் இன்றைய நவீன உலகிலும் இந்த மதங்களின் வளர்ச்சி பற்றி மத பெருக்கம் பற்றி சிந்தித்தால் இன விரோதம் மனித ஒருமை இன்மை போன்ற சம்பவங்கள் அதிகரிக்கவே செய்யும் என்பதை இந்த நவீன உலக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதங்களுக்கான தேவை இனி இல்லை என்பதை உணர வேண்டும். மதங்கள் பல அடிப்படைவாத அம்சங்களை தாங்கி வருவது மிக ஆபத்தானது மனித வளர்ச்சிக்கு பொருத்தம் இல்லாத இன்றைய பகுதி என்பதை புரிய வேண்டும்.
சமூக நடைமுறைகள் ஊடாக பாதிக்கப்படும் மக்களின் தேவைகளை அவர்களின் மன பாதிப்புகளை நிறுத்தும் வழிமுறைகளை கண்டறிந்து தீர்வை கொடுத்தால் மதங்களும் இப்படியானவர்களின் சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாய் பாவிக்கும் ஒரு முறை உருவாக வாய்ப்பில்லை என்பதை உணர வேண்டும்.
இறைவனை நம்ப வேண்டாம் என்று சொல்லவில்லை இறவன் என்ற பெயரில் தாங்கி வரும் மதத்தை தான் ஒதுக்க சொல்கின்றேன். மதங்கள் என்ற பெயரால் செய்யப்படும் வீண் விதண்டவாத கதைகள் கருத்துகள் வேண்டாம். இன்றைய உலகத்துக்கு ஏற்ற வகையில் மத கருத்துக்களை திரிவு படுத்தி மனிதர்களை மூடர்கள் ஆக்கவேண்டாம். மதத்தின் தேவை முடியும் காலம் இது என்பதை புரிவோம்.
ஒன்று படுவோம் இனமாய் உழைப்போம் இன விடுதலைக்காய்.

0 comments:
Post a Comment