
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் துவக்க நாளை முன்னிட்டு இந்திய அளவில் பல நகரங்களில் தமது தொண்டர் அணிவகுப்பு நடத்த திட்ட மிட்டபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டடு, பாரதி நகர் பகுதியில் முஸ்லீம் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்தனர். பேரணிக்கு முறையாக அனுமதி பெறப்பட்டது என்று பாப்புலர் ஃப்ரண்ட் தரப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது. பார்க்க ஒன் இந்தியாவில் SDPI அறிக்கை. சுமார் 4 மணியளவில் பேரணிக்கான துவக்க வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த வேலையில் (Drums set) பேண்டுவாத்தியங்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளது. இதையறிந்த காவல்துறை பேண்டு வாத்தியங்களுக்கு அனுமதி இல்லை என்று தடுத்ததாகவும் அதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் வாக்குவாத்தில் ஈடுபட்டு தடையையும் மீறி பேண்டுவாத்தியங்களை முழங்கச் செய்ததாகவும் இதனிடையே மக்கள் குழுமி இருந்த பகுதியில் இருந்து கற்கல் வீசப்பட்டு காவல்துறையினர் காயம் அடைந்ததாக காவல்துறை தரப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது. பார்க்க மலைமலர் செய்தி.
இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் காவல்துறை தடியடி நடத்தியுள்ளது கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைகுண்டு வீசியும் மற்றும் வானத்தை நோக்கி 6 ரவுண்டு துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறை அனுமதி அளித்துவிட்டு (பேண்டுவாத்தியத்தை காரணம் காட்டி) பிரச்சனை செய்ததாக பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுகிறது. அது மட்டும் அல்லாமல் கற்களை வீசியவர்கள் எங்கள் தொண்டர்கள் இல்லை கற்கள் வீசியவர்களில் இரண்டு பேரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம் மேலும் இரண்டுபேர் தப்பித்து ஓடிவிட்டனர் என்று தெறிவித்துள்ளதை பார்த்தல் இதில் ஏதே சதி நடந்துள்ளது என்று தெளிவாகிறது. மேலும் அவர்கள் முஸ்லீம்கள் இல்லை என்றும் அவர்கள் காவல்துறை இன்பார்மர்கள் (காவல்துறைக்கு தகவல் கொடுக்கும் நண்பர்கள்) எனவும் செய்திகள் வருவதால் இதற்கு பின் காவல்துறையே திட்டமிட்டுருக்கலாமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 65 ஆண்டுகளாக முஸ்லீம்களை அடக்குமுறை செய்தே பழகிப்போன காவல்துறைக்கு இன்று முஸ்லீம்களின் எழுச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன் இராமநாதபுரம் புலிக்காரத் தெரு பகுதியில் சிலர் சிலரால் தாக்கப்பட்டு அந்த சம்பவத்தில் சில முஸ்லீம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். அந்த நேரத்திலும் இதுபோன்ற ஒரு பிரச்சனைக்கு தூவம் போடுவதாகவே காவல் துறை நடந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. பாப்புலர் ஃப்ரண்ட் போரணியால் சமூகத்துக்கு என்ன இலாபம் அல்லது அவர்கள் மற்றவர்களை தூண்டிவிடும் நடவடிக்கையில் ஏன் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், முஸ்லீம் சமுதாயத்துக்கு எதிராக காவல்துறையின் கயமைத்தனத்தை வெளிகொண்டுவர முறையான விசாரனை அமைக்கப்பட வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
இந்த சம்பவத்தில் சில காவி கயவர்கள் தமது மானங்கொட்ட பொய் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளனர். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தலங்களில் முஸ்லீம்கள் காவல்துறையை தாக்கினார்கள் என்றும், இந்தியாவுக்கு எதிரிகள் என்றும் வசைபாடியுள்ளனர். இந்த காவி பயங்கரவாதிகளின் தேச துரோக செயல்பாடுகளை மக்கள் முன் விவாதிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறைகூவல் விட்டுள்ளது. திராணியுள்ளவர்கள் எரிர்கொள்ள தயாராக வேண்டும் அதைவிட்டுவிட்டு. பெரும்பான்மை இந்துக்களை முஸ்லீம்களுக்கு எதிராக திருப்பி தமது கேவலமான அரசியல் இலாபத்தை தேட முயற்சிக்கிறது. மக்கள் இவர்களுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும்.
0 comments:
Post a Comment