Sunday, February 23, 2014

ராகுல் காந்தி
ராகுல் காந்தி எந்த விலை கொடுத்தாவது, அதிகாரத்திற்கு வருவதற்காக பாஜக 'ரத்த அரசியல்' என்ற கொள்கையைப் பின்பற்றுவதாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில பேசிய அவர், பாஜக ரத்த அரசியலைப் பின்பற்றுகிறது என்றும் எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை அடைய வேண்டும் என்பதில்தான் அவர்கள் குறியாக இருக்கிறார்கள் என்றும் காட்டமாக பேசினார்.
சாதி, மதங்களிடையே மோதலை உருவாக்கும் பாஜகவினர், அதிகாரத்துக்காக ரத்தத்தைத் தெளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.
பாஜக பிரதமர் வேட்பாளரும், நரேந்திர மோடியை விமர்சித்த ராகுல், ஊழல் பற்றி பேசிவரும் மோடி, தான் ஆட்சி செய்யும் குஜராத்தில் லோக்ஆயுக்தா அமைக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே அந்த அமைப்புக்கு நியமிக்கப்பட்டதாகவும் சாடினார்.
நாடாளுமன்றத்தில் ஊழலுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்ற தாம் விரும்பியதாகவும், இந்த விவகாரத்தில் பாஜக மெளனம் காத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பாஜகவிடம் தொலைநோக்கு பார்வையில் இல்லை என்றவர், ராஜீவ் காந்தி கம்ப்யூட்டர் பற்றி பேசியபோது, இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் தேவையில்லை என்று கூறிய அவர்கள், தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணமே தாங்கள்தான் என்று உரிமை கொண்டாடுவதாக கூறினார்.
மகளிர் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்ப்பிட்ட ராகுல், பெண்களுக்கு அதிகாரம் அளிக்காத பட்சத்தில், இந்தியா வல்லரசு ஆகாது என்ற கருத்தை முன்வைத்தார்.

0 comments:

Post a Comment